நாட்டு மக்கள் உட்கொள்ளும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் ஆய்வொன்றை​ மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆராயப்படும் என அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்விற்காக 25-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய உணவு வகைகள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன் மாதிரிகளை சேகரிக்கும் பணிகள் அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த காலங்களில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் தரம் குறித்து பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.

அதனை பரிசீலித்ததன் பின்னரே இந்த தீர்மானத்தை எடுத்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி