நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையிலிருந்து விலகியுள்ளார்.

 

இன்றைய  நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரது விலகலினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ம.ராமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவும் தேசிய பேரவையில் உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன கடந்த செப்டெம்பர் 20 ஆம் திகதி தேசிய பேரவையை உருவாக்குவது தொடர்பான பிரேரணையைப் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்ததுடன், இந்த பிரேரணை எதிர்ப்பு இன்றி ஏகமனமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி