சிறுவர்களின் முதுகை நேராக வைத்து வேலை செய்யும் மன வலிமையை கொடுக்க வேண்டும் என்று

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்தொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

“இந்த சிறுவர்கள் அரசியல்வாதிகளின் காலில் விழுவதை நான் விரும்பவில்லை, சிறுவர்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம். அவர்கள் முதுகை நிமிர்ந்து வாழ வேண்டும். எனவே இனி அரசியல்வாதிகளை வணங்க வேண்டாம்.'' என மாத்தறை சாந்த தோமஸ் மகளீர் பாடசாலையின் நிகழ்வொன்றில் பங்கேற்றபோது மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர்கள் மற்றும் முதியோர் தினம் இலங்கையில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு உலக சிறுவர்கள் தினத்தின் கருப்பொருள் "புன்னகைகளின் உலகம்" என்பதாகும்.

உலக சிறுவர் தினத்திற்காக அரச மற்றும் தனியார் துறை சார்ந்த பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், இலங்கைச் சிறுவர்களைப் பாதித்துள்ள தனித்துவமான விடயங்களை மையப்படுத்திய நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்தப்படவில்லை என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

குறிப்பாகப் பள்ளிச் சிறுவர்கள் அதிக அளவில் பசியோடு இருக்கின்றனர். சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு, திரிபோஷா போன்ற சிறுவர்களின் துணை உணவுகளில் நச்சு இரசாயனங்கள் கலந்திருப்பது போன்ற கடுமையான பிரச்னைகள் குறித்து அரசு பொறுப்பான கவனம் செலுத்தவில்லை.

தனியார் துறையினர் தங்களது வணிக இலக்குகளை மையமாக வைத்து சிறுவர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில், சிறுவர்களைப் பாதிக்கும் அவல நிலை குறித்து பொது சமூகம் அதிக கவனம் செலுத்துவதில்லை.

அப்படி கவனம் செலுத்த வேண்டிய விஷயம் குறித்து தீவிர செயற்பாட்டு மையம் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ இது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி