கொழும்பு – அவிசாவளை வீதியின் வெல்லம்பிட்டி சந்தியில் இருந்து கொட்டிகாவத்தை சந்தி வரையிலான பகுதியில்

இன்றிரவு 10 மணி முதல் நாளை (02) மாலை 5 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடுவெலவில் இருந்து ஒருகொடவத்தை வரை நிலக்கீழ் நீர்க்குழாய் பதிக்கும் நடவடிக்கை காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய, குறித்த காலப்பகுதியில் போக்குவரத்திற்கு  குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரம், குடியிருப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து செல்லும் வாகனங்கள், வெல்லம்பிட்டி சந்தியில் இருந்து கொலன்னாவை ஊடாக கொதட்டுவ, கொட்டிகாவத்தை சந்தி ஊடாக மீண்டும் அவிசாவளை வீதிக்கு செல்ல முடியும்.

அவிசாவளையிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் கொட்டிகாவத்தை சந்தி ஊடாக கொதட்டுவ, கொலன்னாவை ஊடாக வெல்லம்பிட்டி சந்தியில் கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி