உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு இன்று (01) மிருகக்காட்சி சாலைகளுக்கு இலவசமாக செல்ல

அனுமதி வழங்கப்படுவதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதற்கமைவாக, பாடசாலை மாணவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சகல மிருகக்காட்சி சாலைகள் மற்றும் உயிரியல் பூங்காக்களுக்கு செல்வதற்கான  சந்தர்ப்பத்தை வழங்குமாறு மிருகக்காட்சி சாலை திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

விலங்குகள் தொடர்பிலான அறிவை வழங்குவதற்காக மிருகக்காட்சி சாலைகளில் பல கல்வி நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விலங்குகளுக்கு உணவளிப்பதற்கும் அவற்றுடன் ஔிப்படம் எடுப்பதற்கும் வாய்ப்பளிக்கப்படுகிறது. 

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி