சமுர்த்தி உள்ளிட்ட அரச கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்போரிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவிருந்ததாக சமுர்த்தி அபிவிருத்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி குறிப்பிட்டார்.

எனினும், அதிகமானோருக்கு அரச கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சமுர்த்தி, முதியோர், விசேட தேவையுடையோர், சிறுநீரக நோயாளர் ஆகியோருக்கான கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்போர், கிராம உத்தியோகத்தரினூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்

தற்போது அரச கொடுப்பனவுகளை பெறும் அனைவரும் மீள விண்ணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என சமுர்த்தி அபிவிருத்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி குறிப்பிட்டார். 

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி