Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சுகாதார ஆலோசனையை புறக்கணித்ததால் 60 கடற்படையினருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சந்தேகம்!

T

The Leader Desk

ஏப்ரல் 25, 2020 • 6:35 AM

சுகாதார ஆலோசனையை புறக்கணித்ததால் 60 கடற்படையினருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சந்தேகம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பணியை ஒப்படைத்துள்ள இராணுவத்தில் பொருள்சார் அறிவு மற்றும் பயிற்சியின் பற்றாக்குறை இத்தகைய பேரழிவுகளுக்கு வழிவகுக்கிறது என்று சுகாதாரத் துறை செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
  • வெலிசர கடற்படை முகாமில் இருந்து இரண்டு நாட்களில் 60 தொ ற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக கொரோனா தடுப்புமையத் தலைவரும், பாதுகாப்புப் படைத் தலைவர் மற்றும் ராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
  • அதே நேரத்தில், வெலிசரவில் உள்ள கடற்படைக் கப்பலை கெமுனு தளத்தில் வைத்து பரிசோதிக்க உள்ளதாகவும் சுமார் 4000 கடற்படையினரும் அவர்களது குடும்பத்தினரும் (வெலிசராவில் அமைந்துள்ள 194 வீடுகள்)ளில் வசிப்பதாகவும் முகாம்களை விட்டு வெளியேறாமல் தனிமைப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
  • சரியான அறிவு இல்லை: கொவிட் -19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் பாதுகாப்புப் படையினருக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது, ஆனால் அவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு இல்லை என்று அரச தாதி ஊழியர்கள்தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பணியை ஒப்படைத்துள்ள இராணுவத்தில் பொருள்சார் அறிவு மற்றும் பயிற்சியின் பற்றாக்குறை இத்தகைய பேரழிவுகளுக்கு வழிவகுக்கிறது என்று சுகாதாரத் துறை செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வெலிசர கடற்படை முகாமில் இருந்து இரண்டு நாட்களில் 60 தொ ற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக கொரோனா தடுப்புமையத் தலைவரும், பாதுகாப்புப் படைத் தலைவர் மற்றும் ராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், வெலிசரவில் உள்ள கடற்படைக் கப்பலை கெமுனு தளத்தில் வைத்து பரிசோதிக்க உள்ளதாகவும்  சுமார் 4000 கடற்படையினரும் அவர்களது குடும்பத்தினரும் (வெலிசராவில் அமைந்துள்ள 194 வீடுகள்)ளில் வசிப்பதாகவும் முகாம்களை விட்டு வெளியேறாமல் தனிமைப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. என்று இலங்கை கடற்படை கூறுகிறது

வெலிசர கடற்படைத் தளத்தில் அறுபது கடற்படையினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு உடைகளை அணிவது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுகிறார்களா என்று சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

சரியான அறிவு இல்லை:

saman rathnapriya

கொவிட் -19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் பாதுகாப்புப் படையினருக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது, ஆனால் அவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு இல்லை என்று அரச தாதி ஊழியர்கள்தெரிவித்துள்ளனர்.

அரச தாதி ஊழியர்கள் சங்கம் மற்றும் தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னபிரிய கூறுகையில், பாதுகாப்புப் படைகள் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடாது, அவர்கள் சுகாதாரத் துறைக்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும்.

நோயாளிகள் மற்றும் ஒரு தொற்றுநோயால் சந்தேகிக்கப்படும் நபர்களுடன் கையாள்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பெரும்பாலான பாதுகாப்புப் பணியாளர்கள் அறிந்திருக்கவில்லை என்று தாதியர் சங்கத்தின் தலைவர் கூறுகிறார்.

Sri Lanka Security and LEGAL - Latest Hot News from Sri Lanka by ...

ஒரு முகமூடி அல்லது கையுறை மட்டுமே இத்தகைய தொற்றுநோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்காது என்று சமன் ரத்னபிரியா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகள் சில நேரங்களில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது பாதுகாப்புப் படையினருக்கு முறையான பயிற்சியினை வழங்கவோ அல்லது நிலைமையைச் சமாளிக்கவோ ஒரு வாய்ப்பல்ல என்று தொழிற்சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளார், நிலைமைக்கு பொறுப்பேற்க வேண்டியது அரசாங்கமே தவிர பாதுகாப்பு அதிகாரிகள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

உயர் அதிகாரிகள் கூட கட்டளைகளை புறக்கணிக்கின்றனர்

இலங்கையில் பொது சுகாதாரத்தில் பணிபுரியும் முன்னணி நிபுணர்களின் குழு சமீபத்தில் நாட்டிள் உள்ள உயர் அதிகாரிகள் கூட கொரோனாவைக் காப்பாற்ற சுகாதார நிபுணர்களின் ஆலோசனையை புறக்கணித்து வருவதாக தெரியவந்துள்ளது.

சுகாதார அதிகாரிகள் முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்களை "உயர்மட்ட அதிகாரிகள்" மற்றும் அடிமட்ட அதிகாரிகள் பின்பற்றாத ஏராளமான சம்பவங்களை இலங்கை சமூக மருத்துவ அதிகாரிகள் சங்கம் (சி.சி.பி.எஸ்.எல்) சுட்டிக்காட்டியுள்ளது.

மிரட்ட வேண்டாம்!

கொவிட் 19 தொற்றுநோயை கட்டுப்படுத்தும் குழுவின் தலைவரின் கூற்றுப்படி, வெலிசர கடற்படைத் தளத்துடன் இணைக்கப்பட்ட படையினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.ஜாஎல  சுதுவெல்ல பிரேதேசத்தில் தனிமைப்படுத்தும் பணியின் போது பலருக்கு வைரஸ் தொற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, “இந்த கடற்படை வீரர்கள் கடந்த சில நாட்களாக ஜா-எலவில் சுதுவெல்ல பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சிலரைக் கட்டுப்படுத்துவதற்கு நெருங்கி பலகியு ள்ளனர் மற்றும் சிலர் தப்பிக்க முயட்சித்தபோது  அவர்களையும் கட்டுப் படுத்தியுள்ளனர்  இந்த வழியில் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது என்றார்.

வெலிசர கடற்படை முகாமில் உள்ள கடற்படை வீரர்கள் ஏற்கனவே கட்டுப் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...