ரஷ்ய ஜனாதிபதி புதின் படுகொலை முயற்சியிலிருந்து தப்பித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.

ரஷ்ய ஜனாதிபதி புதின் உத்தரவின்பேரில் கடந்த மார்ச் 24ஆம் திகதியன்று உக்ரைனில் தொடங்கிய போரானது, முடிவு ஏதும் எட்டப்படாமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைனும் தாக்குப்பிடித்து ரஷ்யாவை எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையில், ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு ஏதோ ஆகிவிட்டது, தற்போது வெளியில் நடமாடுவது புதினே அல்ல... அவரைப்போன்ற மாற்று உருவம் கொண்ட வேறொருவர் தான் உலவி கொண்டிருக்கிறார்" என பேசப்பட்டது.

இந்த பரபரப்புக்கு மத்தியில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புதினின் மூளை என்றழைக்கப்பட்டவரின் மகள், கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். மேலும், அது புதினின் மூளை என்றழைக்கப்பட்டவருக்கு வைத்த குறிதான் என்றும் கூறப்பட்டு வந்தது. அதேசமயம், இதில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லையென உக்ரைனும் தெரிவித்துவந்தது. இந்த நிலையில், ஜனாதிபதி புதின் தற்போது படுகொலை முயற்சியிலிருந்து தப்பித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.

இது குறித்து ரஷ்ய டெலிகிராம் ஊடகத்தில் வெளியான செய்தியில், புதின் தன்னுடைய இல்லத்திலிருந்து வாகன அணிவகுப்புடன் திரும்பியபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் என்றைக்கு இது நடந்தது எனத் திகதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் இந்தத் தாக்குதலில் புதின் சென்ற லிமோசின் காரின் இடது முன் சக்கரம் தாக்குதலுக்குள்ளானதாகவும், புதின் காரிலிருந்து புகை வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இருப்பினும் புதினுக்கு ஏதும் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், கார் அணிவிப்பகுப்பில் முதல் காரிலிருந்த மூன்று பேர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதோடு, ஜனாதிபதியின் பாதுகாப்பு சேவை தலைவர் உட்பட பல அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுக் சிறைக் காவலில் இருப்பதாக மற்றொரு ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி