கட்டணம் செலுத்தப்பட்ட கப்பலில் உள்ள எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படுவதாக

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

துறைமுகத்தை அண்மித்து நங்கூரமிட்டுள்ள மூன்று கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

குறித்த கப்பல்களில் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய்யும் 37,000 மெட்ரிக் தொன் பெட்ரோலும் உள்ளது. 

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்  ஆரம்பிக்கப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் டீசலை தரையிறக்கும் பணிகள் நாளை காலை நிறைவடையும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதனிடையே, நாளாந்தம் 4000 மெட்ரிக் தொன் டீசலும் 3000 மெட்ரிக் தொன் பெட்ரோலும் நாடளாவிய ரீதியில விநியோகிக்கப்படுவதாக பெட்ரோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி