சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்புப் பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சியூலன் விவகாரப் பிரிவின் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்புப் பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், திருகோணமலை, மாத்தறை, கண்டி, குருநாகல் ஆகிய பிராந்திய அலுவலகங்களின் சேவைகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கணினிக் கட்டமைப்பு செயலிழந்துள்ளதால் இந்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு அறிவித்துள்ளது.

கணினி அமைப்பைப் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதுடன், சரிபார்ப்பு சான்றளிப்பு செயன்முறை மீள ஆரம்பிக்கப்படும்போது பொதுமக்களுக்கு அறியத்தரப்படும் என்றும் ஏனைய கொன்சியூலர் சேவைகள் எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மன்னிப்புக் கோரியுள்ளது.

இதுகுறித்த மேலதிக விபரங்களை பிராந்திய அலுவலகங்களைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • கொன்சியூலர் விவகாரப் பிரிவு, கொழும்பு 01 0112338812, 0112338843
  • பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம் 0212215 970
  • பிராந்திய அலுவலகம், திருகோணமலை 0262223182
  • பிராந்திய அலுவலகம், கண்டி 0812384410
  • பிராந்திய அலுவலகம், குருணாகல் 0372225941


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி