சமுர்த்தி உள்ளிட்ட அரசாங்கத்தின் சலுகைகளை எதிர்பார்க்கும் மக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி சமுர்த்தி, முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகை கோரும் மக்கள் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் ஊடாக பிரதேச செயலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்தார்.

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஆகிய தமது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள எந்தவொரு உத்தியோகத்தர் ஊடாகவும் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க முடியும் என அவர் கூறினார்.

எதிர்வரும் 30ஆம் திகதி வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அரச கொடுப்பனவுகளைப் பெறும் அனைவரும் இந்த விண்ணப்பத்தை அனுப்பிவைக்க வேண்டுமென சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி கேட்டுக் கொண்டுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி