மேலும் 12 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த நிலையில், நாமல் ராஜபக்சவிற்கும் அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், ஜனாதிபதியை அண்மையில் சந்தித்துள்ள முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, தான் எந்தவொரு எந்த அமைச்சுப் பதவியும் ஏற்கத் தயார் இல்லையென்று தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதில் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது

எவ்வாறாயினும்இ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து அமைச்சரவைக்கு நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்களின் பட்டியல் ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோஇ மஹிந்தானந்த அளுத்கமகேஇ ரோஹித அபேகுணவர்தனஇ சி.பி.ரத்நாயக்கஇ பவித்ரா வன்னியாராச்சிஇ எஸ்.பி.திஸாநாயக்கஇ விமலவீர திஸாநாயக்கஇ கலாநிதி சரத் வீரசேகரஇ எஸ்.எம்.சந்திரசேனஇ ஜனக பண்டார தென்னகோன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஏனைய கட்சிகள் சார்பில் வஜிர அபேவர்தனஇ ஜீவன் தொண்டமான்இ அசங்க நவரத்னஇ ஏ.எல்.எம்.அடவல்ல ஆகியோர் அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளைஇ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு பெயர்களுக்கு சிலர் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வாரத்தில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாமல் ராஜபக்ச அமைச்சுப் பதவியை ஏற்கப்போவதில்லை என அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்த நாமல் ராஜபக்ச அமைச்சுப் பதவியை ஏற்க வேண்டும் என்று கட்சியின் உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி