அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் தனது இலங்கை விஜயத்தின் போது முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் சகோதரியை சந்தித்துள்ளார்.

அத்துடன் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மரணம் குறித்து அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சமந்தா பவர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் நெருங்கிய தோழி என்பது நினைவூட்டத்தக்கது.

மங்கள சமரவீரவின் அரசியல் வாழ்வின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2019 பெப்ரவரி 28ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த சமந்தா பவர் சிறப்புரையாற்றினார்.

இந்தப் பயணத்தின் முடிவில் தனது தோழியைப் பற்றிய ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

mangala osl n

"மங்கள சமரவீர தனது அடிப்படை விழுமியங்கள் மற்றும் யோசனைகளின் அடிப்படையில் நாட்டை எப்போதும் முதலிடம் வகிக்கும் ஒரு அரிய அரசியல்வாதி ஆவார், மேலும் அவர் மிகவும் திறமையானவர், படைப்பாற்றல் மற்றும் நகைச்சுவை உணர்வைக் கொண்டவர்" என்று அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் கூறினார்.

தனக்கு அருமை நண்பனாக இருந்த மங்களவின் ஆன்மிக குணத்தின் நினைவு இலங்கையில் தொடர்ந்து இருந்து வருவது வியப்பளித்ததாகவும் சம்பந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் தற்போது பெரும் சவால்களை எதிர்கொள்வதோடு மங்களவின் ஞானம், இளைஞர் சமூகத்துடனான அவரது தொடர்புகள் மற்றும் அவரது நடைமுறை இலட்சியவாதம் ஆகியவற்றை இலங்கை இழந்து நிற்பதாகவும் பவர் கூறுகிறார்.

அவர் நம்மிடையே இல்லை என்று வருத்தமாக இருந்தாலும், அவருடைய நினைவாற்றலால் நாம் புத்துணர்ச்சி பெற முடியும் என்று நம்புவதாகவும், தனிப்பட்ட முறையில் அவ்வாறு செய்வதாகவும் பவர் மேலும் கூறுகிறார்.

நாடு திரும்பிய சமந்தா

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை இலங்கை நேரப்படி 3.50 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானத்தில் அவர் புறப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமை முகாமையாளர் தெரிவித்தார்.

சமந்தா பவர் மற்றும் பலர் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடல் மற்றும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான அபிவிருத்தி பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்குடன் நேற்று இலங்கை வந்தடைந்தனர்.

நேற்று ஜா-அல ஏகல பிரதேசத்தில் உள்ள விவசாயப் பண்ணை ஒன்றுக்கு விஜயம் செய்து விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிய சமந்த பவார், இந்நாட்டு விவசாயிகளின் தேவைகளுக்காக 40 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான மனிதாபிமான உதவியாக இலங்கைக்கு மேலும் 20 மில்லியன் டொலர்களை அமெரிக்கா வழங்கவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

சமந்தா பவர் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார் என்பதும் நினைவூட்டத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி