நாட்டில் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனித உரிமைகளுக்கான பதில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

 

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆழமான, ஜனநாயக மற்றும் பாதுகாப்பு சீர்திருத்தங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியறுத்தியுள்ளார்.

மேலும் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கவலை வெளியிட்ட அவர், பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தப்போவதில்லை என அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை மேரியாமை குறித்தும் சுட்டிக்காட்டினார்.

யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ள போதும் காணாமல்போனவர்கள் உறவினர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சமூக செயற்பாட்டாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாணவர்கள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மீதான கண்காணிப்பு நடவடிக்கை குறித்தும் அவர் கவலை வெளியிட்டார்.

அத்தோடு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நீதியை நிலைநாட்டமை, வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கல் நடவடிக்கை மற்றும் காணி அபகரிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கும் அவர் கண்டனம் வெளியிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி