இந்திய கடன் உதவியின் கீழ்  பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

புத்தகங்களை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த வருடத்திற்கான முதல் தவணை எதிர்வரும் மார்ச் மாதமளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதால், பாடப் புத்தகங்களை அச்சிடும் பணிகளை நிறைவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் கூறினார்.

இதேவேளை, பாடசாலை சீரூடைகளில்  30 வீதமானவை உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

41 இலட்சம் மாணவர்களுக்கு தேவையான சீருடைகளில் 70 வீதமானவற்றை வழங்குவதற்கு சீன அரசு முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி