இலங்கையில் வாரத்திற்கு 1250 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போது டெங்கு நோயாளர்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

06 மாவட்டங்களில் 55 கிராம சேவையாளர் பிரதேசங்கள் டெங்கு வைரஸ் பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரையில் 75,993 சொத்துக்கள் சோதனையிடப்பட்ட பிரதேசங்களில் நடத்தப்பட்டது.

ஆய்வு செய்யப்பட்ட சொத்துக்களில், 20,704 டெங்கு கொசு உற்பத்திக்கு உகந்த இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி