2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத்திட்டத்திற்கான வாக்களிப்பில் இருந்து விலகியிருக்க பல அரசியல் தரப்பினர் இன்று பாராளுமன்றத்தில் தீர்மானித்துள்ளனர்.

2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிப்பதைத் தவிர்ப்பதற்கு SJB தீர்மானித்துள்ளதாக சமகி ஜன பலவேகய (SJB) பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளனர்.

2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கு தானும் டலஸ் அழகப்பெருமவும் உட்பட 13 SLPP பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வாக்களிக்கப் போவதில்லை என SLPP பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

கடந்த 2 நாட்களாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி