முட்டையொன்றின் விற்பனை விலையை குறைப்பதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சந்தையில் முட்டையின் விலை கட்டம் கட்டமாக குறைவடையும் என அவர் கூறியுள்ளார்.

கோழிகளுக்கான தீவனம் மற்றும் மருந்துப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் அதிக செலவுகளை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது  சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே, முட்டைக்கான உற்பத்திச் செலவை விட குறைவான விலையில் முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையில் முட்டைகளை விற்பனை செய்வதில் சிரமம் காணப்படுவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி