கொழும்பு 05 மற்றும் கொழும்பு 06-இல் நாளை 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை (20) சனிக்கிழமை இரவு 11 மணி முதல் நாளை மறுதினம் (21) காலை 9 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு 04-இல் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

அவசர திருத்தப் பணிகளுக்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி