லலித் குமார் வீரராஜூ மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய அரசியல் செயற்பாட்டாளர்கள் இருவரை காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள

வழக்கில் சாட்சியமளிப்பதற்காக  முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷ இம்மாதம் 27ம் திகதி யாழ்ப்பாணம்

நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும் அன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமலிருப்பதற்கு ஆயத்தமாவது தெரிய வந்துள்ளதாக பெரட்டுஹாமி சமாஜவாதி கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜயகொட theleader.lk இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

தாமரை மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கடுமையான உயிர் அச்சுறுத்தல் உள்ளதால் அவரால் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்றும், எனவே இவ்வழக்கை யாழ்ப்பாணத்திலிருந்து மாற்றி கொழும்பில் விசாரணை செய்வதற்கு வசதிகளைச் செய்து தருமாறு செப்தெம்பர் 27ம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது நீதவானிடம் கோரிக்கை விடுப்பதற்கு அவரது சட்டத்தரணிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையும் தெரிய வந்துள்ளதாக புபுது ஜயகொடி மேலும் கூறினார்.

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி அந்தோனிபிள்ளை பீட்டர் போல் முன்னிலையில் குறித்த வழக்கு கடந்த ஜூன் 21ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கோத்தாபய ராஜபக்ஷ சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி எஸ். அமரசிங்க குறிப்பிடும்போது, கோத்தாபய ராஜபக்ஷ சுகயீனமுற்று வெளிநாட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதால் இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக ஆஜராகவில்லை எனக் கூறினார். இதனால் நீதவான் இந்த வழக்கை செப்தெம்பர் 27ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

2011ம் ஆண்டு டிசம்பர் 09ம் திகதி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக லலித் மற்றும் குகன் ஆகிய அரசியல் செயற்பாட்டாளர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த வேளை காணாமல் போயிருந்தனர்.  இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்த சந்தர்ப்பத்தில் கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடமும் யாழ்ப்பாணம் நீதிமன்றம் இதற்கு முன்னர் சாட்சிகளைப் பதிவு செய்திருந்தது.

வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் தெரிவிக்கப்பட்ட சாட்சிகளுக்கு அமைய கோத்தாபய ராஜபக்ஷவின் பெயரும் குறிப்பிடப்பட்டதால் அவரையும் நீதிமன்றத்திற்கு அழைப்பதற்கான தேவை ஏற்பட்டதால் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

அப்போது பாதுகாப்புச் சபை உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுக்கும் பொறுப்பான பிரதானியாகச் செயற்பட்டது கோத்தாபய ராஜபக்ஷவாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி