கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல்கள் காரணமாக தலைமைகள் தப்ப வேண்டுமாக இருந்தால் அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து பாராளுமன்றத்தின் ஊடாக

தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கு ரணில் திட்டமிட்டுள்ளார்.மைத்திரி மற்றும் மகிந்த ஆகிய இருவரும் ஓரளவு கரிசனை கொண்டுள்ளதுடன் அதன்படி அந்த ஜனாதிபதியாக மைத்திரியை தேர்வு செய்வதென்று ஒரு இணக்கப்பாட்டுக்கு ஓரளவு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

இக் கருத்துக்களுக்கு அமைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்த நடாத்தப்பட்ட விசேட அமைச்சரவை கூட்டம் எந்த ஒரு தீர்மானமும் எடுக்கப்படாமல் நிறைவுக்கு வந்துள்ளது.<p>ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் முன்வைத்த யோசனைக்கு பெரும்பாலான அமைச்சர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இதனை அடுத்தே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்த விசேட அமைச்சரவை கூட்டம், தீர்மானம் எட்டப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்பது ஜனாதிபதித் தேர்தல் வர்த்தமானி செய்யப்பட்ட நேரத்தில் விவாதிக்கப்படாது என்பது ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு முன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பாக விவாதங்கள் இடம்பெற்றுள்ளன இதன் போது நிறைவேற்று அதிகார ஒழிப்பு தொடர்பாக அமைச்சர் மங்கள மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

>இதேவேளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஒரு குழு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஜனதிபதியும் பிரதமரும் அவசர அவசரமாக எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னர் அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் கூட்டமொன்று நடந்தது.இதில் கலந்துகொண்ட ரவூப் ஹக்கீம் உள்ளடங்கலான பல அமைச்சர்கள், இந்த முயற்சிக்கு கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்யும் எந்தவொரு முயற்சிகளும் வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே செய்யப்பட வேண்டுமென அவர்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை அமைச்சர்களான சம்பிக்க, ஹரீன் பெர்னாண்டோ உட்பட்ட பல அமைச்சர்கள் இதே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தெரிகிறது.இவ்வளவு காலமும் இதனை செய்யாமல் – ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு செய்வது மக்கள் மத்தியிலும் அதிருப்தியை உண்டுபண்ணுமென அமைச்சர்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டினர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி