“70 வீத சிங்களவர்களால் ஜனாதிபதி ஒருவரை நியமித்துக் கொள்வதற்கு எம்மால் ஏன் முடியாது?” என கேள்வி எழுப்பும் பொதுபல சேனா அமைப்பின்

பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்,  இது தொடர்பில் அனைத்து சிங்களவர்களினதும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

சிங்களவர்கள் உதாசீனப்படுத்தப்பட்டு பெயரளவிலான சிங்களவர் ஒருவர் அதிகாரத்திலிருப்பதில் எந்தப் பலனுமில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.  பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடு செய்த இளைஞர்களுடனான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்தார்.  இந்த செயலமர்வு கடந்த சனிக்கிழமை நுகேகொட ஆனந்த சமரகோன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய ஞானசார தேரர், பௌத்த பிக்குகளின் கடமை, இருக்கின்ற கட்சிகளுக்கு தலைவர்களைத் தேடுவதல்ல. நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய “தேசிய தலைவர்” ஒருவரை உருவாக்குவதேயாகும்.

அவர் இவ்வாறு கூறியிருப்பது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுது “தேசிய தலைவராக” என அறிவிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே என்பது முக்கிய விடயமாகும்.

கோத்தாபய ராஜபக்ஷ இந்த தோ்தலில் போட்டியிடுவது “தேசிய தலைவராக” வே என அவரது ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும மாத்தரை மாவட்ட ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுணவின் வியாபாரிகள் கூட்டத்தில் உரையாற்றும் போது கூறியதாக கோத்தாபயவின் சிரேஷ்ட ஆலோசகர் திலித் ஜயவீரவின் “அத தெரண” இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும் பொதுபல சேனாவின் இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய ஞானசார தேரர் தொடர்ந்தும் உரையாற்றும் போது,

“எமது நாடும், இனமும், பௌத்த சமயமும் மோசமான ஆபத்துக்கள் பலவற்றிற்கு முகங்கொடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில் நுகோகொடையில் கூடியிருக்கும் உங்கள் அனைவரையும் பார்க்கும் போது எனக்கு மிகுந்த உற்சாகமாக உள்ளது. அதே போன்று மகிழ்ச்சியும், உங்களது எதிர்பார்ப்புக்களுடன் கூடிய முகங்களைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த வேதனையும், கவலையும் ஏற்படுகின்றது. எனக்கு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படுவது பல வருடங்களாக எமது தாய் நாட்டைப் பாதுகாத்த உயர்ந்த மனிதர்கள் இன்னமும் உயிர்வாழ்கின்றார்கள் என்பதை பார்க்கும் போதுதான்.  என்றும் இந்நாடு முகங்கொடுத்த பலவிதமான எதிரிகளின் மோசமான அழிவுகளிலிருந்து எமது நாட்டைப் பாதுகாத்தது உங்களைப் போன்றே நாட்டுக்கும், இனத்திற்கும், பௌத்த சாசனத்திற்கும் எல்லையற்ற பற்றைக் கொண்டிருந்தவர்களாகும்.  அந்தப் பரம்பரை எமக்கும், நாட்டிற்கும் பௌத்த சாசனத்திற்கும் மிகுந்த பலமும், பெருமையுமாகும்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி