சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 15 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். 

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த 15 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு  நாடு கடத்தப்பட்ட அனைவரும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என விமான நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.

19 நாட்களுக்கு முன்னர், குறித்த 15 பேரும் மீன்பிடி படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு பயணித்துள்ளனர்.

இதன்போது குறித்த படகு அவுஸ்திரேலியாவை அண்மித்த போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அந்நாட்டு கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு இன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் அவுஸ்திரேலியா இராணுவத்துக்குச் சொந்தமான ஏ.எஸ. வை. 975 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 4.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், இவர்களுடன் அவுஸ்திரேலியா பாதுகாப்பு பிரிவின் அதிகார்கள் பலரும் வருகைத் தந்திருந்தனர்.

பின்னர் குறித்த 15 பேரும் இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் ஊடாக  குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி