மல்வானை மாபிட்டிகம பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்து ஆடம்பர வீட்டை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


இந்த வழக்கு விசாரணைகள் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொம்பே, மல்வான, மாபிட்டிகம பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து பெரிய வீடு, நீச்சல் தடாகம் மற்றும் பண்ணை ஒன்றை நிர்மாணித்து, அரசாங்க நிதியை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அவரது உறவினரான திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு மே 13ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்த நிலையில், அன்றைய தினம் நாட்டில் நிலவும் மோசமான நிலைமைகள் காரணமாக உயர்நீதிமன்றத்தில் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் முன்னிலையாகப் போவதில்லை என அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணைகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி