இலங்கையின் பொருளாதாரம் தீர்க்க கடினமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், எதிர்வரும் மாதங்களில் இதன் விளைவு இன்னும் மோசமாக இருக்கலாம் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற இளம் தொழில் வல்லுநர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விவகாரங்கள் அனைத்தும் சில காலமாக இணைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்த முன்னாள் பிரதமர், டொலர் பற்றாக்குறை, வருமானம் குறைதல், செலவு அதிகரிப்பு மற்றும் தாங்க முடியாத கடன் சுமையே பிரதான பிரச்சினைகளாகும் என்றார்.

2021ஆம் ஆண்டளவில் இலங்கை மின்சார சபைக்கு 79 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் இந்த நட்டம் இன்னும் அதிகமாக இருப்பதாகவும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணமான பல முக்கிய காரணிகளில் இதுவும் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கை மின்சாரசபை இவ்வருடம் 100 பில்லியன் ரூபா நட்டத்தை சந்திக்க நேரிடும் எனவும், தற்போது மின் அலகு ஒன்றுக்கு 17 ரூபா அறவிடப்படுவதாகவும் ஆனால் அதற்கான செலவு 53 ரூபாவாகும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமையை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

“2020 மற்றும் 2021 இல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் இழப்பு 83 பில்லியன் ரூபாயாகும். எனினும் ஒரு நாளில் ஒரு பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக அமைச்சர் இப்போது கூறுகிறார். 

தற்போது விலை உயர்த்தப்பட்ட போதும், நாளொன்றுக்கு 327 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படும் என கூறப்படுகின்றது. இதன்படி ஆண்டு இறுதிக்குள் நாட்டுக்கு மேலும் 80 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும்.

இந்தக் கடன்கள் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியினால் வழங்கப்படுகின்றன. "இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவையும் இலங்கை அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கியுள்ளன."

“நஷ்டத்தைக் குறைக்க மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டுடிய நிலை இன்று நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி