நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தமிழ் அரசியல் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

இது தொடர்பில்  யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் கடந்த 25 ஆம் திகதி வக்கின் மக்கள் பிரதிநிதிகள், மற்றும் கட்சி தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து, 20வது திருத்தத்தை நீக்கி, 19வது திருத்தத்தை 21வது திருத்தமாக மீண்டும் அமுல்படுத்தி, தேசிய பிரச்சினைக்கு தீர்வாக சமஷ்டி ஆட்சிக் கட்டமைப்பை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக யாழ் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

 இந்த பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் விரிவான அறிக்கையை தயார் செய்யுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் அது எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும்.

வெகுஜன அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி, தமிழரசுக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, டெலோ அமைப்பின் பிரதிநிதி விந்தன் கனகரத்தினம், ஈ.பி.ஆர்.எல்.எப்., தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். மற்றும் புளொட் தலைவர் சித்தாலி தர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.எனினும் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என தொடர்ந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்த இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அது குறித்து இந்த சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி