பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பதில் பதிவாளர் உட்பட பொறுப்பு வாய்ந்த மூவர் அரச சொத்துக்களையும், மனித வளங்களையும் துஷ்பிரயோகம் செய்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு எதிராக பல்கலைக்கழகத்தின் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.


இதனை பேராதனை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய உபுல் திசாநாயக்க, பல்கலைக்கழக நிர்வாகத்துறையினர், மற்றும் கணக்காய்வினை மேற்கொள்வதற்காக வருகை தந்திருந்த குழுவினர் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பேராதனை பல்கழலைக்கழகம் டய்ம்ஸ் உயர் கல்வி தரப்படுத்தலில் உலகின் அதி சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்ட ஒரு குறுகிய காலப்பகுதியில் இந்த பல்கலைக்கழகத்தின் பல துஸ்பிரயோகம் நிதி மோசடி தொடர்பாக தகவல்கள் வெளிவந்துள்ளமை பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கும் அதன் கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்கள் இவ்விதமாக ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவருடைய பொறுப்பைவிட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொரு பொறுப்பாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பதவி உள்ளது.

துணைவேந்தர் ஒருவர் நியமனம் பெறுவது மூன்று வருடங்களுக்கு மாத்திரமே. அவர் மேலும் மூன்று வருடங்களுக்கு தொடர்ந்து தனது துணை வேந்தர் பதவியை தொடர வேண்டுமானால் அதற்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபையின் அனுமதியும் (பல்கலைக்கழகத்தின் கவுன்சில்) ஜனாதிபதியின் சம்மதமும் இருக்க வேண்டும். அப்படி இரண்டு தரப்பினரும் சம்மதித்தால் மாத்திரமே அவர் தன்னுடைய துணைவேந்தர் பதவியை மேலும் மூன்று வருடங்களுக்கு தொடர முடியும்.

அரசாங்க சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த காரணத்தால் பேராதனை பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் ராஜபக்ச உட்பட 3 பேருக்கு எதிராக பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபை (பல்கலைக்கழகத்தின் கவுன்சில்) அவர்களுடைய பதவியில் இருந்தும் அரசாங்க சேவைகளில் இருந்தும் வெளியேற்றியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் எம்.டி.லமாவன்ச தெரிவித்தார்.

பல்கலைக்கழக நிர்வாக சபையில் (பல்கலைக்கழகத்தின் கவுன்சில்) 27 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள்.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக 14 பேரும் பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற 9 பீடத்திற்கான பீடாதிபதிகளும் பல்கலைக்கழக செனட் கூட்டத்தின் மூலமாக இருவரும் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மற்றும் வேந்தர் ஆகிய அனைவருடைய மொத்தமே இந்த 27 நபர்கள் என்பதாகும். இந்த நபர்களே பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை கொண்டு செல்கின்றவர்கள்.

இந்த குற்றச்சாட்டிற்கு ஆளான பதில் பதிவாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விடயம் நாட்டில் கொரோனா காலத்தில் பேராதெனிய ரிக்காட்டன் பகுதியில் அமைந்துள்ள பதிவாளருக்கு சொந்தமான வீட்டில் கிரைன்டர் உட்பட பல பொருட்களையும் இதன்போது பாவித்திருப்பதுடன் பல்கலைக்கழகத்தில் வேலைப்பிரிவில் தொழில் புரிகின்ற மூன்று நபர்களை தனது சொந்த வீட்டு வேலைகளுக்காக பயன்படுத்தினார் என்ற குற்றச் சாட்டே முன்வைக்கப்பட்டதாக இதனை விசாரணை செய்த பல்கலைக்கழக நிர்வாக சபையினர் (பல்கலைக்கழகத்தின் கவுன்சில்) தெரிவிக்கின்றார்கள்.

இந்த விடயங்களை கொழும்பில் இருந்து வருகை தந்த கணக்காய்வு பிரிவினர் நேரடியாக பார்வையிட்டுள்ளதுடன் இது தொடர்பான தகவலை ஏற்கனவே உயர் பதிவியில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர் ஒருவரே கொழும்பு கணக்காய்வு பிரிவினருக்கு வழங்கி இருக்கின்றார் என்பதை பல்கலைக்கழகத்தின் தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

மூன்று நபர்களும் பதில் பதிவாளருடைய வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது கொழும்பில் இருந்து கணக்காய்வு செய்வதற்காக வருகை தந்திருந்த குழுவினர் விடயத்தை கேட்ட பொழுது தன்னுடைய வீட்டின் திருத்த பணிகளை ஒரு ஒப்பந்த காரருக்கு வழங்கியிருந்ததாகவும் அவர்கள் மூலமாகவே குறித்த மூன்று நபர்களும் இங்கு வேலைக்காக அமர்த்தப்பட்டிருப்பதாகவும் இதற்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்ற விடயத்தையே பதில் பதிவாளர் ராஜபக்ச கணக்காய்வை மேற்கொண்ட குழுவினருக்கு தெரிவித்திருக்கின்றார்.

இந்த விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் பதில் பதிவாளரை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடமைபுரிந்தவர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க இந்த வியடத்தை உறுதிப்படுத்தினார்.

அதேநேரம் குறித்த மூன்று நபர்களும் பல்கலைக்கழகத்தில் வேலைக்கு சமூகமளித்திருந்த நிலையில் அவர்களுக்கான வேலைகளை முறையாக வழங்காமல் அவர்களை பதில் பதிவாளர் வீட்டின் வேலைகளுக்கு அனுப்பி வைத்தமை தொடர்பாக வேலைப்பகுதி பொறியியலாளர் மற்றும் வேலைப்பகுதியின் அதிகாரி ஒருவருக்கும் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழகத்தின் கவுன்சில் ஊடாக இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விசாரணையை இரண்டு அல்லது மூன்று கூட்டங்களில் முடிவிற்கு கொண்டுவர வேண்டிய நிலையில் இந்த தீர்ப்பு வழங்குவதற்கு காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் புதிய துணை வேந்தராக பேராசிரியர் எம்.டி.லமாவன்ச நியமிக்கப்பட்டார்.
அவர் குறித்த விசாரணை தொடர்பாக பதில் பதிவாளர் மற்றும் வேலைப்பகுதியின் பொறியியலாளர் இருவரும் தகுதிகான் காலத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டும்; வேலைப்பகுதி அதிகாரியினதும் ஏனைய இருவருடைய அரச சேவையையும் மொத்தமாக மூவரையும் வெளியேற்றுவதாக அறிவித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி