இலங்கையிலிருந்து நான்கு மாத கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை உட்பட நான்கு குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 18 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்னனர்.


வியாழக்கிழமை காலை ஆறு மணிக்கு மன்னார் மாவட்டம் பேசாளை கடற்கரையிலிருந்து இரண்டு படகுகளில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப், கஸ்தூரி, சுமித்ரா, நகுஷன், பியோனா, நகுலேஸ்வரன் என நான்கு மாத கர்ப்பினி பெண், ஒன்றரை வயது சிறுவன் உட்பட மூன்று குடும்பத்தை சேர்ந்த 13 பேர் தமிழகத்திற்கு படகில் பயணித்துள்ளனர்.

இவர்கள் வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சென்று இறங்கினர்.
இதேபோல் வியாழக்கிழமை மதியம் யாழ்பாணம் மாவட்டம் நீர்வேலி பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பேச்சாலை கடற்கரையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையை சென்றடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலிஸார் அவர்களை மீட்டு மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தனது நான்கு மாத கர்ப்பிணி மனைவி பாதுகாப்பாக குழந்தை பிறசவிக்க வேண்டும் என்பதால் தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் நகுஷன் தெரிவித்துள்ளார்.

தற்போது பால்மாவு மற்றும் கோதுமையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் தனது ஒன்றரை வயது சிறுமியை வைத்து இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உணவு பஞ்சம் ஏற்படும் என்ற அச்சத்தில் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் தமிழகத்திற்கு குடும்பத்துடன் அகதியாக வந்ததாக சிறுமியின் அப்பா பிரதீப் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைக்கு பின் இந்த 18 இலங்கையர்களையும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி முதல் இன்று வரை 60 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்ஞம் புகுந்துள்ளனர்.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் உணவு பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டும் என்ற அச்சமும் நிலவிவருகின்றது.
இந்நிலையிலேயே, இலங்கை தமிழர்கள் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி பைப்பர் படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

எனினும் இந்திய அரசு இவ்வாறு இலங்கையர்கள், அகதிகளாக தஞ்சம் புகுவதை தவிர்க்கும் வகையில் கடற் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி