தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு முன்னோக்கிக் கொண்டு செல்லுகின்ற ஏப்ரல் 3ஆம் திகதி மக்கள் போராட்டம் தொடர்பில் ரட்டே ரால தொடர்ச்சியாக விடயங்களை குறிப்பிட்டு வந்தார்.

எவ்வாறு இருப்பினும் இந்த மக்கள் போராட்டத்தை தற்பொழுது அதிகமான மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இருப்பினும் இந்த நாட்டில் இருக்கக்கூடிய கல்வி கற்றவர்களல, சில கலாநிதிகள், பேராசிரியர்களுக்கு மக்கள் போராட்டத்தின் இயல்பு நிலை தொடர்பில் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.

சிலர் குறிப்பிடுவது பாடல்களை பாடி புரட்சியை எவ்வாறு ஏற்படுத்த முடியுமென்று. வீதியிலே நடித்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியுமா என்று. அவர்களுக்கு தேவை உக்ரேன் ரஷ்யா போன்ற மோதலே. 

அதிகமானவர்கள் கேட்பது இந்த போராட்டத்தின் தலைவர் எங்கே என்று. அமைப்பு ரீதியான வேலைத்திட்டம் எங்கே என்று கேள்வி கேட்பது. இதனுடைய பொறிமுறை என்னவென்று. இன்னும் சிலர் கேட்பது அதனுடைய மோட்டிவேஷன் அப்பப்பா இருக்கின்றார் அல்லவா என்று.

 அது ஒரு  முகப்புத்தக வேலை என்றும் குறிப்பிடக் கூடியவர்கள் இருக்கிறார்கள். யூடியூப் சேனலில் உழைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டம் என்று கேட்க கிடைக்கின்றது. போராட்டத்தின் தலைவர்கள் என்று முகங்களை காட்டி கொண்டு தங்களுக்கு அழுத்தம் இருக்கிறது என்று ஐரோப்பிய நாடுகளுக்கு காட்டிக்கொண்டு விசாவைப்  பெறுவதற்கான ஒரு விடயம் என்றும் சிலர் குறிப்பிடுகின்றார்கள். 

அந்த பகுப்பாய்வுக்கு ஏற்ப இது ஒரு சிறப்பற்ற ஒழுங்குபடுத்தப்படாத போராட்டமாகும். ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவது மாத்திரம் இலக்கு கொண்ட ஒரு வேலைத்திட்டமாக இருப்பதே ஒழிய அதற்கு அப்பால்  எந்த ஒரு வேலைத் திட்டமும் இல்லாத ஒரு போராட்டம் என்றும் குறிப்பிடுகின்றார்கள். 

அதாவது மேற்கொள்ள தேவையற்ற ஒரு போராட்டம் என்று. அதுதான் தற்பொழுது எங்களுக்கு கேட்கக்கூடிய பேச்சு கதைகளாக இருக்கின்றது. பகுப்பாய்வு எல்லாவற்றையும் தலையிலே வைத்துக் கொண்டு ரட்டே ராலவுக்கு நினைக்கத் தோன்றியது இந்த மக்கள் போராட்டத்தின்  இயல்பு நிலை தொடர்பில் எடுத்துரைக்க வேண்டும் என்று.

உங்களுக்கு தெரியும் யுத்தத்திலே பங்குபற்றுவது மிகவும் பயிற்சி பெற்ற ஒரு இராணுவம் என்று. அவர்களுக்கு இலக்கொன்று இருத்தல் வேண்டும். அதற்கு செல்லுவதற்கு தேவையான கட்டளை இடுகின்ற அதிகாரமட்டங்களும் இருக்கும். எல்லா விடயங்களும் அந்த வழிநடத்தலின் கீழ் தான். 

அவர்களுக்கு துப்பாக்கியால் சுடுவதற்கு அதிகாரம் இருக்கின்றது. ஒரு திட்டமிடலுடன் கூடிய யுத்த விடயத்தில்  கூட அவ்வாறு திட்டமிடப்பட்ட யுத்த தந்திரங்கள் கூட தோல்வி அடைந்திருக்கிறது. 1971ஆம் ஆண்டு போராட்டத்தில். 88/89 ஆம் ஆண்டு போராட்டத்திற்கு ஜேவிபி உறுப்பினர்கள் வருகை தந்தார்கள். 

அவர்கள் ஐந்து வகைகளாக காணப்பட்டார்கள்.கல்வி கற்றவர்கள், சிலர் ஆயுத அணியிலே இருந்தவர்கள். கலந்துரையாடல்களில் பங்குபற்றியவர்கள். அனைத்து வகையான விடயங்களையும் பகுப்பாய்வு செய்து அதனை கற்றவர்கள். அவர்களுடைய இறுதி எண்ணமாக இருந்தது சமூக உடமை தொடர்பான விடயமே. இருப்பினும் ஜேவிபி அந்தப் போராட்டம் இரண்டிலும் தோல்வியடைந்தது.

ரட்டே ரால நடந்த அந்தப் போராட்டம் எந்த ஒன்றையும் குறைத்து மதிப்பிடுவது  கிடையாது. இருப்பினும் தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. வடக்கிலேயே எல்டிடியி  அங்கத்தவர்களுக்கு நோக்கம் ஒன்று இருந்தது. அது ஈழ இராஜ்ஜியமாகும். ஆயுதப்படை பயிற்சி இருந்தது. அவர்களுக்கு ஒரு விடயத்தை செய்வதற்குரிய ஏதாவது ஒரு வேலைத்திட்டம் காணப்பட்டிருந்தது. சுனாமி வந்த சந்தர்ப்பத்தில் அம்பாறையில் எல்டிடீ தலைவர்களில் ஒருவராகிய உதயனுடன் கதைப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டியது.

 உதயனுக்கு சோசலிசம் தொடர்பான அறிவு இருந்தது. அதனால் ரட்டே ரால விளங்கிக் கொண்ட விடயம் தான் எல்டிடிஈ இடையேயும் கல்வி தொடர்பான ஒரு வேலைத்திட்டம் இருந்தது என்று. எவ்வாறு இருப்பினும் 30 வருடகால யுத்தத்தின் பின்னர் வடக்கில் இடம்பெற்ற அந்த ஆயுதப் போராட்டத்தில் தோல்வியை சந்திக்க வேண்டி ஏற்பட்டது.இந்த இடத்தில் ரட்டே ராலவுக்கு சொல்ல வேண்டி இருப்பது ஒவ்வொரு அமைப்புக்களிலும் உரிய நோக்கங்களுக்காக பயிற்சி பெற்றவர்கள் இருக்கின்றார்கள். 

அதற்காகத்தான் அவர்கள் அந்தப் போராட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் போல் இருக்கின்றார்கள். அரசாங்கம் இந்த போராட்டத்தை ஒழிப்பதற்கு தேவையான பரிமாணங்களை பார்க்கின்றது. உண்மையிலேயே ஜேவிபி இதனை உருளைக்கிழங்கு போன்ற பரிமாணம் கொண்டு பார்க்கின்றது. உருளைக்கிழங்கு போன்று செய்கின்றது என்ற வசனத்தை பயன்படுத்தியது இந்த போராட்டம் தொடர்பில் ஜேவிபியின் தலைவரின்  நிலைப்பாடு ஆகும். 

அதிகமான மக்கள்  போராட்டத்திற்கு  அடிமட்டத்திலிருந்து ஆசீர்வாதங்களை வெளிப்படையாக வழங்கிய போதும் அது கீழால் உருண்டை அறைப்பது  போன்றே உள்ளது. ரட்டே ரால குறிப்பிடுவது இந்த மக்கள் போராட்டம் இதனை விட மாறுபட்டது. இதற்கு ஒன்றிணைந்தவர்கள் ஏலவே  திட்டமிட்டு இணைந்தவர்கள் அல்ல. பயிற்சி பெற்றவர்கள் அல்ல. ராஜபக்சக்கள் நிர்வாகம் மூலமாக அரசியல் வேலைத் திட்டங்கள் மூலமாக மிகவும் அழுத்தத்திற்கு உட்பட்ட மக்கள்தான் இங்கே இருக்கின்றார்கள். 

அந்த அழுத்தத்திற்கு எதிராக எழுச்சி பெற்ற  ஒரு விடயம் தான் இங்கே காணப்படுகின்றது. அவர்கள் போராட்டத்திற்கு வருகை தந்தது  தங்களுக்கு ஏற்பட்ட அழுத்தத்தை அடிப்படையாக வைத்தே. சில சந்தர்ப்பங்களில் அங்கு இருக்கக்கூடிய எந்த ஒருவரும் போராட்டம் இந்த அளவு விருத்தியடையும் என்று நினைத்து வருகை தந்தவர்கள் அல்ல. தங்களுக்கு ஏற்பட்ட அழுத்தத்தை வெளியிலே காட்ட வந்தவர்களுக்கு ஏனையவர்களுக்கும் அத்தன்மை காணப்பட்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது .

இந்த நாட்டிலே வறுமைக்கு உட்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல மத்தியதர வர்க்கத்திற்கும் இப்பிரச்சினை உயர்ந்தபட்சமாக விளங்கியது. அதனால்  மக்கள் போராட்டத்திற்கு வருகை தந்தது உத்வேகத்துடன் தான். வீதியிலே செல்லக்கூடிய வாகனங்களில் இருக்கக்கூடியவர்கள் கூட இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக தங்களுடைய ஹோனை அடித்துக் கொண்டு செல்கின்றார்கள். 

நாட்டினுடைய நாலாபுறங்களிலும் போராட்டம் ஏற்பட்டு இருக்கின்றது. அந்த இடத்தில் தான் அவர்களுக்கு நினைக்கத் தோன்றுகின்றது இந்த சக்திமூலம் கோட்டாபயவை விரட்டியடிக்க முடியும் என. இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க முடியும் என்று. அதற்கு உயர்ந்தபட்ச உத்வேகம் ஏற்பட்டது மிரிஹானயில்.ரட்டே ரால இதற்கு முன்னர் குறிப்பிட்ட ஆக்கத்தின் மூலம் இந்த போராட்டத்தின் முக்கிய திருப்பு முனையாக அமைந்திருந்தது மிரிஹான என குறிப்பிட்டிருந்தார்.

 அதற்கு அடுத்த கட்டம் தான் காலிமுகத்திடலில்  டயர் கட்டுகின்ற போராட்டம் காணப்படுகின்றது. போராட்டம் என்பது அவ்வாறான ஒன்றே. போராட்டக்காரர்கள் ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வேலைத் திட்டத்தை மேற்கொண்டு வருவது கிடையாது. அவர்களுக்கு இருந்த ஒரேயொரு விடயம் தங்களுடைய அழுத்தத்தை நீக்குவது மாத்திரம்தான். 

அதற்கு தேவையான அமைப்புரீதியான ஒழுங்கமைப்புக்கள் ஏற்படுத்துவது போராட்டத்தின் உள்ளேயே. அந்த நோக்கத்தை ஏற்படுத்துவதும் போராட்டத்தின் உள்ளேயே. அது மாத்திரமல்ல தலைவர்கள் உருவாக்கப்படுவது போராட்டத்தின் உள்ளே. தலைவர்கள் உருவாக்கப்படுகிறது போராட்டத்தின் உள்ளே என்ற விடயத்தை கற்றுத்தந்த ஜேவிபி இந்த போராட்டத்தின் முன்னமே அந்த விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. 

அவர்களிடம் இருக்கின்றது 1917 ஆம் ஆண்டு ரஷ்ய  புரட்சியில் கோவத்தின் அடிப்படையில் உருவாகிய தலைவர்கள் சிலர். டில்வின், அனுர,விஜித, வசந்த சமரசிங்க, பிமல் ரத்னாயக்க போன்றோர் அந்த குழுவை சார்ந்தவர்கள். அதற்குப் புறம்பாக இன்னும் ஒரு சிலர் இருக்கின்றார்கள் அதாவது 1928ஆம் ஆண்டு அளவில் அதற்குப் பின்னர் சிறிது முன்னதாக வருகை தந்தவர்கள் லால்காந்த,நலின்த ஜயதிஸ்ஸ, ஹந்துன்நெத்தி  போன்றவர்கள். 

இவர்கள் கேட்பது அந்த புதிய போராட்டத்தில் அமைப்புரீதியான வேலைத்திட்டமொன்றை.இறுதி நோக்கமொன்றை,தலைமையொன்றை. இவர்களுக்கு பைத்தியமோ தெரியவில்லை.ரட்டே ரால குறிப்பிடுவது இவை யாவும் ஏற்படுத்தப்படுவது இந்த போராட்டத்தின் உள்ளே தான். 

இந்த போராட்டத்தின் உள்ளே இருப்பது இந்த  சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான். இதனுள்ளே நல்லது கெட்டது ஆகிய இருவரும் இருக்கலாம். அதே போன்று உக்கக்கூடிய உக்க  முடியாதவர்களும் இருக்கலாம். மோட்டிவேஷன் அப்பாவும் இருக்கலாம். ஜேவிபி குறிப்பிடுகின்ற அடிப்படையில் கடந்த முறை கோட்டாபய வெற்றி பெறுவதற்கு பின்னால் சென்றவர்களும் இருக்கலாம். 

அவ்வாறாயின் இந்த அழிவின்  ஆரம்பத்திற்கு காரணமாகிய மஹிந்தவை கொண்டுவருவதற்கு பின்னால் சென்றவர்கள் ஜேவிபிதானே. அவ்வாறான ஜேவிபிக்கு ராஜபக்சவை அனுப்ப கூடிய உரிமை இருப்பது போன்று கோட்டாபயவை கொண்டுவந்தவர்களுக்கு  கோட்டாபயவை அனுப்புவதற்கான உரிமம்  இருக்கின்றது.  அபிவிருத்தி மற்றும்  மறுதலிப்பு ஏற்படுவது போராட்டத்தின் உள்ளேயே என்றே ரட்டே ரால குறிப்பிடுவதாகும்.

 ஒன்று அவர்கள் அபிவிருத்தி அல்லது மறுதலிப்புக்கு உட்படுவார்கள். தற்பொழுது போராட்டம்  இருப்பது இருந்த இடம் அல்ல. போராட்டம் விருத்தியடைந்து முன்னோக்கிக் கொண்டு செல்கின்றது. உண்மையில் நடைபெற்றிருப்பது போராட்டத்தோடு முன்னோக்கி செல்ல இந்த நாட்டினுடைய அரசியல் கட்சிகள் அதற்கேற்ப செல்லாமல் இருப்பதே. புதிய விடயங்கள் பிறக்கின்ற பொழுது பழைய விடயங்கள் பயன்பாட்டில் இருந்து அப்புறப்படுத்தும். 

அவர்களுடைய பக்கத்தில் பார்க்கின்ற பொழுது அது  தவறு ஆகும். அதாவது போராட்டம் அவர்களுக்கு தவறிழைத்துள்ளது. அதனால் ஜேவிபிக்கு  தத்துவவியலில் குறிப்பிடப்படும் மூன்று பிரபஞ்ச விதிகளை அந்த இடத்துக்கு மட்டும் ஏற்புடையதாக்கி கொள்ள முடியாது. யாராக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

மக்கள் போராட்டத்திற்கு முன் நோக்கி செல்வது கட்டம் கட்டமாக. ஏப்ரல் 3ஆம் திகதி போராட்டம் கடந்திருப்பது போராட்டத்தின் முதல் கட்டத்தை மாத்திரமே. இரண்டாம் கட்டம் மக்கள் போராட்டம் மற்றும் பாராளுமன்ற போராட்டத்தை இணைக்கின்ற செயற்பாடாகும்.ரட்டே ரால  குறிப்பிடுவது இதில் இன்னும் பல கட்டங்கள் இருக்கின்றது. அந்த கட்டங்கள் அனைத்தும் பூரணமான சந்தர்ப்பத்தில் இந்தப் போராட்டம் ஒரு நல்ல நிலைக்கு சென்றடையும்.

 தலைவர்கள் உருவாகி இருப்பார்கள், வேலைத்திட்டங்கள் உருவாகியிருக்கும்.பொறிமுறையை சரியாக சொல்லக்கூடியதாக இருக்கும். அதனால் அதுவரை குழப்ப நிலைக்கு உட்பட வேண்டாம்.அதன்போது இந்தப் போராட்டத்தின் பொருத்தமற்றவைகள்   மறுதலிக்கப்பட்டு நல்லவைகள் மாத்திரம் எஞ்சியிருக்கும். இந்த போராட்டத்திற்கு ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தற்பொழுது மறுதலிக்கப்பட்டுள்ளது. 

ஆரம்பத்தில் தாக்கப்பட்ட அந்த விடயங்கள் தற்போது காலாவதியாகிவிட்டது.ஆரம்பத்தில் தாக்கப்பட்ட விடயம் அல்ல தற்போது இருப்பது.முன்னேறியுள்ளது போராட்டம். முன்னதாக ராஜபக்சே கூட்டத்தினர் குறிப்பிட்டது  காலிமுகத்திடலில் வருகை தந்து அதனை சுற்றி வருகை தந்ததன் பின்னர் அங்கு இருக்கக்கூடிய பத்து பதினைந்து பேர் மாத்திரம் உறுதியாக இருக்க முடியும் என்று.

 அதன் பின்னர் அந்த இடத்திற்கு வந்த விடயம் தான் இது ஒரு பௌத்த சூழ்ச்சி என்று.போயா தின ஆராதனையை கேட்டதற்கு பின் குறிப்பிடுகின்றார்கள் நீங்கள் ஞானாவுக்கு  பேசியபோதும் தங்களிடம் இருப்பது மூடத்தனம் தான் என்று. ஏனென்றால் இந்த இடத்தில் 18 வகையான நாட்டியங்களும் அரங்கேற்றப்பட்டு முடிந்துவிட்டது. 

அவர்களுக்கு தெரியும் போராட்டத்திலே பயன்படுத்தக் கூடிய எந்த ஒரு விடயத்தையும் கைவிடாமல் செய்வார்கள்  என்று.ரட்டே ரால  குறிப்பிடுவது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னர் ஒரு சூனியம் ஒன்றை வெட்டினாலும் சிறப்பாக அமையும் என்று. அவை அனைத்தும் போராட்டத்தின் விதியே ஒழிய வேறொன்றும் இல்லை.

 தற்பொழுது குறிப்பிடுகின்றார்கள் இந்த இடத்திற்கு வருகைதந்த கலைஞர்கள் ஒவ்வொருவரிடமும் இரண்டு இலட்சம் ரூபாய்கள் பெறப்பட்டது என்று.அவது நந்தா மாலனி வந்தது இரண்டு லட்சம் ரூபாய்களை எடுத்துக்கொண்டு. உண்மையில் இந்த கீழ்த்தரமான தாக்குதல் மூலமாக ஒரு விடயம் நடக்கின்றது.

 போராட்டக்காரர்கள் இன்னும் இன்னும் விருத்தியடைந்து தேவையான சவால்களை அவர்கள் முன்னிலையில் கொண்டு செல்லக் கூடியதாக காணப்படுகின்றது. அதன் மூலமாக போராட்டக்காரர்கள் இன்னும் புதிய ஒரு பரிணாமத்துடன் போராட்டத்திற்கு உட்படுத்தப்படுவது மாத்திரம்தான். அதற்கு உண்மையில் நன்றி செலுத்த போராட்டக்காரர்களும் ஏதுவாய் இருத்தல்  வேண்டும்.

அப்படியாயின் போய் வருகின்றேன்

கடவுள் துணை வெற்றிகிட்டட்டும்

இப்படிக்குரட்டே ரால

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி