அரசாங்கத்துடனும், ராஜபக்ஷர்களுடனும் இனி எவ்வித கொடுக்கல் வாங்களும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மக்களால் வெறுக்கப்படும் ராஜபக்ஷர்களின் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது, சந்திப்பும், பேச்சுவார்த்தையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

 நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு சில தவறான தீர்மானங்களின் பிரதிபலனே ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வழியேற்படுத்திக்கொடுத்தது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஆட்சியில் உள்ள அரசாங்கம் சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்பட வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கும்,முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கும் அரசாங்கம் முன்னுரிமை வழங்காத காரணத்தினால் அரசாங்கத்திலிருந்து வெளியேறி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறோம்.

 எங்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாததன் விளைவை தற்போது முழு நாடும் எதிர்க்கொள்கிறது. பாராளுமன்றில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் செயற்படும் விதம் வெறுக்கத்தக்கது.

 நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை குறித்து கடந்த 3 நாட்களாக பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின் போது ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துக்கொண்டார்கள்.

 மக்களாள் புறக்கணிக்க்கப்படும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்துடன் இனி எவ்வித பேச்சுவார்த்தையும் கிடையாது,சந்திப்பும் கிடையாது. நாட்டு மக்களுடன் ஒன்றினைந்து ஒரு உறுதியான தீர்வை பெற்றுக்கொள்வோம். தற்போதைய அரச தலைவரின் தலைமையிலான அரசாங்கம் தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் நல்ல நிலைப்பாடு கிடையாது. 

ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட்டு,நாட்டு மக்கள் மகிழ்வுடன் இருந்தால் மாத்திரமே சர்வதேசம் நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்கும் எனவும் குறிப்பிட்டார். 

கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி