தொடர் போராட்டத்தை கைவிடுமாறு கோரி நேற்றைய தினம் பிரதமர் மக்களுக்கு விசேட உரையாற்றி கேட்டுக்கொண்ட போதிலும் கொழும்பு - காலி முகத்திடலில் தற்போதைய அரசாங்கத்தை வீடு செல்லுமுாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் கூடாரங்கள் அமைத்து தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள் “கோட்டா கோ கம” என்ற பெயர்ப்பலகைப் அங்கு காட்சிப்படுத்தியுள்ளனர்.

 கடும் மழையையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக போராடிவரும் இளைஞர் , யுவதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரும் ஜனாதிபதி பதவி விலகும் வரை ஓயப்போவதில்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளனர். 

கடந்த காலங்களில் ராஜபக்ஷ அரசாங்கங்கள் செய்த ஒட்டுமொத்த தவறுகளுக்கும் தற்போது மக்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

நேற்றைய போராட்டத்தில் கொல்லப்பட்ட சித்திரவதைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் படங்கள் ஜனாதிபதி செயலகம் முன்பாக வைக்கப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலுக்கு நீதி பெற்றுக்கொடுக்காமை, உத்தகால தவறுகள், இன, மத முரண்பாடுகளை முன்னிறுத்தி அரசியல் இலபம் ஈட்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை மக்கள் முன்வைக்கின்றனர்.

எவ்வாறாயினும் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு இதுவரை அரசாங்கம் எந்த ஒரு தீர்வையும் முன்வைக்க விலை, டொலரின் பெறுமதி தொடரச்சியாக அதிகரித்து செல்கின்றது. பொருட்களின் விலையும் மக்களால் தாங்கிக் கொள்ளமுடியாத அளவில் உயர்வடைந்துள்ளது. 

நாட்டின் அதிகமான மக்கள் புத்தாண்டை கொண்டாடும் நிலையில் இல்லை. இந்த மாத இறுதியில் நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியை சந்திக்கும் என அரசியல் வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். புத்தாண்டின் பின்னர் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என அரசு அறிவித்துள்ளது. 

எனினும் இதன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சாந்தப்படுத்தாது. எவ்வாறாயினும், மக்களின் குரலுக்கு செவிசாய்க்க அரசு மறுக்குமானால் அது ஒரு புரட்சிக்கு வழிவகுக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி