சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதியாக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி உடனடியாக

முன் வரவேண்டும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ttvnews.lk இணையத்திற்கு வழங்கி நேர்காணலின் போதே அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

“சந்திரிகாவின் ஆட்சி காலத்தில் ரணில் முடியாது என்றது ரணிலால் முடியும் என்பதால்தான் என பின்னர் நீங்கள் கூறினீர்கள். அவ்வாறு ரணிலால் முடியும் என கூறிய நீங்கள் தற்போது ரணிலுக்கு பதிலாக சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சிக்கின்றீர்கள். ஏன் இது?” என இணையத்தளத்தின் ஆசிரியர் திலிணி சமன்மலீ கேட்ட கேள்விக்கு அமைச்சர் பின்வருமாறு பதில் வழங்கினார்.

“ரணிலால் முடியாது என போஸ்டர் அடித்தது உண்மைதான். அதேபோன்று அதைப் பற்றி நான் தற்போதும் கூறியுள்ளதோடு, ரணிலால் முடியாது எனக் கூறியது  அந்நேரத்தில் சந்திரிகா குமாரதுங்க அம்மையாருக்கு எதிராக இருந்த பிரதான பலமிக்க அணி ரணில் விக்ரமசிங்கவாகும். அந்த தீர்மானத்தை கணிப்பீட்டு அறிக்கைகளை அடிப்படையாக வைத்து நாம் அன்று எடுத்தோம்..



காரணம் 99ம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்கவும், சந்திரிகாவும் சரிசமனாகவே இருந்தார்கள். தேர்தல் முடிவுளினிலால் அது உறுதியானது. அது மாத்திரமல்ல, உண்மையில் 2005ம் ஆண்டிலும் கூட ரணில் விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவுடன் சமனான நிலையிலேயே இருந்தார். அப்போது ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தது வடக்கு மக்களின் வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்காமல் போனது அல்லர் வடக்கு மக்கள் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கால் போனதனலாகும்.

எனினும் அதேபோன்றதொரு பிரபலம் அன்று எந்த ஒரு அரசியல்வாதிக்கும் இருக்கவில்லை. அன்றிருந்த பிரபலம் இன்றில்லை. எவ்வாறான பிரபலமானவர்களுக்கும் இந்த நிலை ஏற்படும். உண்மையிலேயே நான் கூறுவதையிட்டு எவரும் கோபம் கொள்ளத் தேவையில்லை. காரணம் நான் ஒழிவு மறைவின்றி பேசவதனாலாகும்.

இன்று அனைத்து கணிப்பீடுகளிலும் தெரியும் விடயம் என்னவெனில், நான் ஏற்கனவே கூறியதைப் போன்று ரணில் விக்ரமசிங்க உண்மையிலேயே இந்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய ஜனாதிபதிதான். எனினும் அவரால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நிலை இன்றிருக்கும் நிலையின் கீழ் முடியாது.

அதனால்தான் நாம் மீண்டும் கேட்கின்றோம்,  சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதியாக்குவதற்கு  உடனடியாக ஐக்கிய தேசிய கட்சி முன்னே வரவேண்டும்” எனக் கூறிகார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி