நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் பதவி விலகக் கோரி வீதியில் இறங்கியுள்ளனர்.

“நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் தோட்டத் தொழிலாளர்கள் தற்போது இந்த அரசாங்கத்திடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வீதிக்கு வந்துள்ளனர். 

கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவர கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவரை வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்கின்றனர்” என தேசிய தொழிலாளர் சங்க தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உட்பட அரசாங்கம் பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் நேற்று தலவாக்கலையில் ஒன்றுகூடினர்.ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய திகாம்பரம், நாடு முழுவதிலும் உள்ள மக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்றார்.

 அரசாங்கத்தின் பங்காளியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) அண்மையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளது. 

இதனைக் குறிப்பிட்ட தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் மக்களை விட்டு வெளியேறி மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவார்கள் என்றார்.

“மலையகத்தில் உள்ள அரசியல்வாதிகள், மக்கள் போராட்டத்திற்கு பயந்து அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இது ஒரு அரசியல் நாடகம். இவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

அரசாங்கம் வந்து இவர்களுக்கு அமைச்சு கொடுத்தால் மக்களைத் தள்ளிவிட்டு வாளிகளை வீசி அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்வார்கள்.

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் அந்த பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம், ராஜபக்ஷ அரசாங்கம் அவற்றை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டது.

"ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் இன்னும் அதிகாரத்தில் உள்ளனர், மக்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை."இந்த அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் வரை தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம். என்றார்.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி