கோட்டா வீட்டுக்கு செல்லவேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்கவேண்டும். அதன் பின்னர் இடைக்கால அரசாங்கம் அமைத்து பிரச்சினைக்கு தீர்வுகாண நாங்கள் தயார் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.


இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைத்து செயற்படுமாறு அரசாங்கம் விடுக்கும் சவாலில் இருந்து நாங்கள் நழுவிச்செல்லப்போவதில்லை. மக்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் பட்சத்தில் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தெடார்ந்து தெரிவிக்கையில்,

2020 வரவு செலவு திட்டத்தின் பதில் உரையை நானே ஆற்றினேன். அப்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லவேண்டும் என தொடர்ந்து தெரிவித்தோம்.

அதனை அரசாங்கம் செய்யவில்லை. அன்று நாணய நிதியத்துக்கு சென்றிருந்தால் இந்தளவு நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருக்காது. அரசாங்கத்தின் இயலாமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த பிரச்சினைக்கு ஐந்து பிரதான காரணங்கள் இருக்கின்றன. அவற்றில்,

வரி குறைப்பு
வரி குறைப்பு காரணமாக நாட்டின் வருமானம் வீழ்ச்சியடைந்தது . வரி வருமானம் இல்லாமல் நாட்டை கொண்டுசெல்ல முடியாது. நியாயமான முறையில் வரி அறவீட்டு முறைமை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அரசாங்கத்தின் வரி கொள்கை பிழை என்பதை நாம் தொடர்ந்து தெரிவித்து வந்தோம்.

கடன் மீள் வியூகம்
கடன் மீள் வியூகம் செய்யவேண்டும் என முன்னரே நாம் தெரிவித்தோம். ஜூலை மாதத்தில் ஒரு பில்லியன் கடன் செலுத்த வேண்டி இருக்கின்றது என அரசாங்கம் தெரிவிக்கின்றது.

அன்று 500 மில்லிய டொலர் கடன் செலுத்தும்போது அதனை முழுமையாக வழங்கவேண்டாம் என நாங்களும் மத்திய வங்கியின் நிதிக்குழுவில் இருந்தவர்களும் தெரிவித்தோம் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.

அந்த பணம் இருந்திருந்தால் எமக்கு தேவையான எரிபொருள், பால்மா, மருந்து பொருட்களை கொண்டுவர முடிந்திருக்கும்.
அந்தக் கடனை செலுத்துவதன் மூலம் சிலர் நூற்றுக்கு 200வீதம் இலாபம் பெற்றுக்கொண்டனர். இதுதொடர்பாக சர்வதேச ரீதியில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளவேண்டும் என்ற பிரேரணையை முன்வைக்கின்றேன். என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி