Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கொழும்பு,களுத்துறை,குருநாகல் உட்பட 5 மாவட்டங்களில் வாக்குச் சீட்டு அச்சிடும் பணி இடைநிறுத்தப்பட்டது!

T

The Leader Desk

ஜூன் 7, 2020 • 4:18 PM

கொழும்பு,களுத்துறை,குருநாகல் உட்பட 5 மாவட்டங்களில் வாக்குச் சீட்டு  அச்சிடும் பணி இடைநிறுத்தப்பட்டது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த ஐந்து மாவட்டங்களின் வேட்புமனுக்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் முன் நிலுவையில் உள்ள பல வழக்குகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • தற்போது 6 மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படுகின்றது: இருப்பினும், பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
  • இப்போது ஆறு மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு வருகின்றன, அவற்றில் ஒரு மாவட்டத்தில் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி நாளை (08) நிறைவடையும் என்று அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
  • பொதுவாக பொதுத் தேர்தலில் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு 15 முதல் 20 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

இந்த ஐந்து மாவட்டங்களின் வேட்புமனுக்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் முன் நிலுவையில் உள்ள பல வழக்குகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வேட்புமனுக்கள் தொடர்பான நீதித்துறை நடவடிக்கைகள் இருந்தபோதிலும் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதை இடைநிறுத்த நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்காவிட்டால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணியைத் தொடர்வது வழக்கம். நீதிமன்றங்கள் இதுவரை அத்தகைய இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்கவில்லை.

பிரதான தேர்தல் மாவட்டங்கலான கொழும்பு, குருநாகல் மற்றும் களுத்துறை ஆகியவை அதிக எண்ணிக்கையிலான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படும்  மாவட்டங்கள். இந்த சூழ்நிலையில், இந்த மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் தாமதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தேர்தல் தொடர்பாக வாக்குச் சீட்டுகளை அச்சிடுவது குறித்து ஆரம்பத்தில் அதிகாரிகள் அக்கறை கொண்டிருந்ததாக அரசாங்க அச்சகத்தின் தலைவர் theleader.lk இடம் தெரிவித்துள்ளார்.

தற்போது 6 மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படுகின்றது:

இருப்பினும், பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலைப் போலல்லாமல், வாக்குச் சீட்டுகள் மாவட்டத்திலிருந்து மாவட்டத்திற்கு தனித்தனியாக அச்சிடப்பட வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் வேறுபட்டவர்கள்.

இப்போது ஆறு மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு வருகின்றன, அவற்றில் ஒரு மாவட்டத்தில் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி நாளை (08) நிறைவடையும் என்று அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

பொதுவாக பொதுத் தேர்தலில் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு 15 முதல் 20 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எங்களுக்கு தகவல் கொடுத்த அச்சகத்தின்  தலைவர் அவை அவரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...