1200 x 80 DMirror

 
 

இலங்கையில் தற்போது 7 மணித்தியாலத்திற்கும் அதிகமான மின் விநியோக தடை அமுல் படுத்தப்பட்டு வரும் நிலையில்  மின்சார நெருக்கடியைத் தவிர்ப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மார்ச் 5 ஆம் திகதிக்கு பின்னர் மின் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் தடையின்றி மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவிடம் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி தமக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கூறியுள்ளார்.

மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்வதற்குத் தேவையாக வசதிகளை திறைசேரி மற்றும் மத்திய வங்கியுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பதற்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

உயர்தர பரீட்சைகள் நடைபெற்றுவரும் நிலையில் நாட்டி சுமார் 2 வாரங்களுக்கு மேலாக அமுல்படுத்தப்பட்டுவரும் தொடர் மின் விநியோக தடை பரீட்சாத்திகளை வெகுவாக பாதித்துள்ளது. ஆரம்பத்தில் 2 மணித்தியாளங்களாக ஆரம்பித்த மின்வெட்டு தற்போது 8 மணித்தியாலம் வரை நீடிக்கப்படும் அபாயத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தில் இது மேலும் தாக்கத்தை ஏற்படுத்து காரணியாக தற்போது வடிவெடுத்துள்ளது.

தொழில் பேட்டைகளுக்கு மின் விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது எனினும் மின் சாரத்தை நம்பி கைதெமாழில்களில் ஈடுபடுபவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. “அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு எந்தவொரு திட்டமிடப்பட்ட மின் விநியோகத் தடையும் அமுல்படுத்தப்பட மாட்டாது” என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க கடந்த மாத நடுப்பகுதியில் தெரிவித்திருந்தார்.

எனினும் அதன் பின்னர் மீண்டும் நாட்டில் தொடர்ச்சியாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டும் என அறிவிப்பை வெளியிட்டார்.நாட்டின் மின் உற்பத்தி தொடர்பில், பொறுப்புமிக்க அதிகாரியின் இந்த அறிவிப்புகள் மக்களுக்க குழப்பத்தை ஏற்படுத்தியது.எவ்வாறாயினும் நாட்டு மக்கள் பல சிக்கல்களுக்கு மத்தியில் தொடர்ச்சியாக மின்தடையை எதிர்கொண்டுவருகின்றனர்.

பல தடவைகள் மின் வெட்டுத் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதன் பின்னர் சாதகமான செய்திகள் வெளியான போதிலும் மின்வெட்டை நிறுத்துவதற்குச் சாதகமான திட்டங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 

 ஜனாதிபதி மின்வெட்டைத் தடுப்பதற்குப் பலமுறை பணிப்புரை விடுத்திருந்தார் எனினும்  இலங்கை மின்சாரசபைக்குத் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்ய போதுமான திட்டங்கள் வழங்கப்படவில்லை.இலங்கையில் தற்சமயம் பெட்ரோல் ஏழு நாட்களுக்கும், டீசல் நான்கு நாட்களுக்கும் மட்டுமே கையிருப்பில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எரிபொருள் கப்பல் இன்று கொழும்பை வந்தடைகின்ற போதிலும் எரிபொருளை நாட்டுக்கு விடுவிப்பதற்கு நாடு மற்றொரு போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.பெரும்பாலான பகுதிகளில் மார்ச் நடுப்பகுதியில் தற்போதைய மின்வெட்டு 10 மணிநேரமாக உயரும் என்றும் விரைவில் மின்சார விநியோக நேரம் வெளியிடப்படலாம் என்றும் CEB பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, நாட்டில் நிலவும் வரட்சியான சூழ்நிலை மற்றும் எரிபொருள் நிலைமைகள் காரணமாக அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு மின் விநியோக துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஜனாதிபதி வெளியிட்டுள்ள பணிப்புரைக்கு அமைய, மின்வெட்டில் 5 ஆம் திகதி முதல்  மக்களுக்கு சாதகமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி