1200 x 80 DMirror

 
 


உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் உக்ரைனில் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.


ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை மேலும் முடக்குவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 11வது சிறப்பு அவசர கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.


இதன் போது பேசிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் , “போதும் - போதும்; போர் நடவடிக்கை அதிகமானால் அப்பாவி பொதுமக்கள் தான் பலியாகின்றனர். ராணுவ வீரர்கள் திரும்பவும் தங்கள் இடங்களுக்கு திருப்பி செல்ல வேண்டும். பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.


உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டியது அத்தியாவசிய தேவையாக உள்ளது. சமாதானம் மட்டுமே இந்த பிரச்சினைக்கான தீர்வு ஆகும். என தெரிவித்துள்ளார்.


ரஷியா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடி கொடுத்து போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானுடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இடையிலான தொலைபேசி உரையாடலில், உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்த வேண்டும் என வலியுறித்தினார்.


எனினும், உக்ரைனின் இராணுவ பலத்தை முழுமையாக அழிப்பது மற்றும் கிரிமியா பகுதியை மேற்கு உலக நாடுகள் அங்கீகரிப்பதுமே போருக்கு முடிவு’ என பிரான்ஸ் அதிபரிடம் ரஷிய அதிபர் புதின் இதன் போது கூறியுள்ளார்.


இதற்கிடையில், போர் முடிக்கு கொண்டு வர உக்ரைன் - ரஷ்யா இடையே பெலாரஸ் நாட்டின் கொமெல் நகரில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.


உக்ரைன் - ரஷ்யா பல மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது சண்டையை உடனடியாக நிறுத்திவிட்டு வெளியேறிம்படி ரஷ்யாவுக்கு உக்ரைன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


ஆனால், பேச்சுவார்த்தையின் இறுதியில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல் வெளியாகவில்லை.
உக்ரைன் - ரஷ்யா இடையே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை போலாந்து - பெலாரஸ் எல்லையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான படிவத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


ரஷ்யா , உக்ரைன் மீது படையெடுத்துள்ள நிலையில், உக்ரைனை ஒரு சிறப்பு நடைமுறையின் கீழ் உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெற அனுமதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

01 1


உக்ரைனை உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர அனுமதிக்கப்பட வேண்டும் என்று பல்கேரியா, செக் குடியரசு, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒரு கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதை எதிர்த்தே ரஷ்ய ஜனாதிபதி உக்ரைன் மீதான தாக்குதலை ஆரம்பித்தார்.


இதேவேளை அணு ஆயுதங்களையும் தயார் நிலையில் வைக்க படையினருக்கு ரஷ்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதால் 3ஆம் உலகப்போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்ற பதற்றம் உலக அளவில் வலுவடைந்துள்ளது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி