1200 x 80 DMirror

 
 


பொதுமக்கள் வாக்காளராகப் பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
ஒன்லைன் மூலம் வாக்காளர் பதிவு இடம் பெறும் நிலையில், ஆயிரகணக்கானவர்கள் இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு மத்தியில் இந்த பேரணி இடம்பெற்றுள்ளது.


பெப்ரவரி முதலாம் திகதி வாக்காளர் தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் யாழ். மாவட்டத்தில் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.


நேற்று காலை 7.30 மணியளவில் மாவட்ட செயலகம் முன்றலில் இருந்தும், காலை 8 மணியளவில் கொடிகாமம் பஸ் நிலைய முன்றலில் இருந்தும் ஆரம்பித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சாவகச்சேரி - சங்கத்தானை ரயில் நிலையம் அருகில் வந்து, அங்கிருந்து பேரணி தென்மராட்சி கலாசார மண்டபம் வரை சென்று நிறைவடைந்தது.


அதன் பின்னர் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் வாக்குரிமை அளித்தல், வாக்காளராகப் பதிவு செய்தல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகளும் நாடகங்களும் இடம்பெற்றன.


“உங்கள் வாக்குதான் நாட்டின் எதிர்காலம். உங்கள் வாக்குரிமையைப் பாதுகாக்க தவறாமல் வாக்காளராகப் பதிவு செய்யுங்கள்” என்ற வாசகம் எழுதப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேனர்களுடன் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.


இந்த நிகழ்வுகளில் யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன், மேலதிக அரச அதிபர் பிரதீபன், மேலதிக அரச அதிபர் (காணி) முரளிதரன், மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ், பிரதேச செயலர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 jaffna w

 

14

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

15

15

https://bit.ly/3uHGkH6

16

 

17

18 19

20

21 22

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி