எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கான பிரசார நடவடிக்கை தொடர்பாக

அறிவிக்கும் நிகழ்ச்சி நிதி அமைச்சர் மங்கள சமரவீர இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் எம்.பி.க்கள் குழு கலந்து கொண்டுள்ளதுடன், இரவு உணவு விருந்துபசாரம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

அதன்படி, சஜித் பிரேமதாசவுக்கான அடுத்த கூட்டம் குருணாகலில் நடைபெற உள்ளத்துடன், எதிர்வரும் 5 ஆம் திகதி குறித்த கூட்டம்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்றைய கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் குறித்த பல்வேறு கருத்துக்கணிப்புகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இருப்பினும், சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த தீவிரமாக ஈடுபட வேண்டும் எனவும், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்த பல கட்சிகளின் ஆதரவை இப்போது சஜித் பிரேமதாச பெற முடியும் என்று கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்  அல்ல என்றாலும், எதிர்காலத்தில் கட்சிக்குள் இது தொடர்பாக நிறைய சர்ச்சைகள் ஏற்பட வாய்ப்பிருந்தாலும், அது தொடர்பாக சஜித்தின் நெருங்கிய குழு தெரிவித்ததாவது ஜனநாயக ரீதியாக வெல்லக்கூடிய ஒரு பிரபலமான நபரைக் கண்டுபிடிக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளான சர்ச்சை முடிவடையவில்லை, ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்த மற்ற குழுக்கள் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை பரிந்துரைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி