Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

கல்கிஸ்ஸ பொலிஸார் தாக்கியதில் 49 வயதுடைய ஒருவர் மரணம்!

T

The Leader Desk

ஏப்ரல் 1, 2021 • 4:30 PM

கல்கிஸ்ஸ பொலிஸார் தாக்கியதில் 49 வயதுடைய ஒருவர் மரணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • “கல்கிஸ்ஸ பொலிஸார் எனது கணவரை கைது செய்து பொய் குற்றஞ்சாட்டி மிருகத்தனமாக அவரை தாக்கியதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
  • ம் திகதி பொலிஸார் கைது செய்தனர்.
  • பிணையில் வீடு திரும்பிய அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்.
எழுத்து அளவு:

கஞ்சாவை வைத்திருந்தார் என பொய் குற்றஞ்சாட்டி கடந்த 18ம் திகதி தனது கணவரை கைது செய்து அவரை கடுமையாகத் தாக்கியுள்ளதாகவும், கடுமையாக தாக்கப்பட்ட தனது கணவர் வைத்தியசாலையில் 5 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இறந்துவிட்டதாகவும் இறந்தவரின் மனைவி குறிப்பிடுகிறார்.

“கல்கிஸ்ஸ பொலிஸார் எனது கணவரை கைது செய்து பொய் குற்றஞ்சாட்டி மிருகத்தனமாக அவரை தாக்கியதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர். பிணையில் வீடு திரும்பிய அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். பிறகு அவரை நான் வைத்தியசாலையில் அனுமதித்தேன்.

இன்று காலையில் அவர் இறந்துவிட்டார். பொலிஸார் எனது கணவரை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர். இதற்கு சரியான நியாயம் கிடைக்க வேண்டும். 18ம் திகதி பொலிஸார் கைது செய்தனர். 19ம் திகதி பிணை கிடைத்தது. 21ம் திகதி அவரை வைத்தியசாலையில் அனுமதித்தேன். உடம்பெல்லாம் கடுமையாக வலிப்பதாகக் கூறினார் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. முதுகில் காயங்கள் இருந்தன. தலையில் கடுமையான காயம். பட்டியால் அடித்ததற்கான அடையாளங்கள் இருந்தன. கூரான ஆயுதத்தினால் குத்தியிருந்தனர்” என இறந்தவரின் மனைவி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...