இலங்கையின் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற போரில் வெற்றி பெறுவதற்கு தேவையான ஒத்துழைப்பை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு வழங்கியதாக சீனா தெரிவித்துள்ளது.

"பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்ரீலங்காவிற்கு உதவ ஏனைய நாடுகள் தயக்கம் காட்டினாலும், சீனா ஸ்ரீலங்காவிற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை அளித்து பல தசாப்தங்களாக நீடித்த போரை வெற்றிகரமாக நிறைவு செய்தது” என தெரிசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குழுவிடம் ஸ்ரீலங்காவிற்கான சீனத் தூதுவர் கி செங்கோங் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளும், ஸ்ரீலங்காவில்  சீனாவுடன் போட்டிபோடும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் யுத்தத்தின் போது அரசாங்கத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்கியதாக சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா தொடர்பில் சீனா இரகசிய நிகழ்ச்சி நிரலை கொண்டுள்ளது என்ற பிரச்சாரத்தை நிராகரித்த சீன தூதுவர், வடக்கின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை வழங்க சீனா உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

“மூன்று தீவுகளில் மின் உற்பத்தித் திட்டங்கள் இரத்து செய்யப்படுவதால் ஸ்ரீலங்கா பெரும் இழப்பை சந்தித்துள்ளது.  இந்த திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் விலைமனுகோரல் விடுக்கப்பட்டு, சீன தனியார் துறையால் கொள்முதல் செய்யப்பட்டது. இதற்கும் சீனத்  தூதரகத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘சுதந்திர’ வர்த்தக ஒப்பந்தங்கள்

ஸ்ரீலங்காவிற்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

“ஸ்ரீலங்காவின் நிதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரு நாடுகளும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த கடன் நெருக்கடியை ஸ்ரீலங்கா வெல்லும் என நான் நினைக்கிறேன். இந்த சிரமங்கள் தற்காலிகமானவை. எது எவ்வாறாயினும், சீன-ஸ்ரீலங்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஸ்ரீலங்காவிற்கு நீண்டகால சலுகையாக அமையும்” என செங் ஹாங் தெரிவித்துள்ளார்.

உத்தேச சீன-ஸ்ரீலங்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஸ்ரீலங்காவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டை சீன தூதுவர் கடுமையாக மறுத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி