கேஸ் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டுமென பெண்கள் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

“நாடு தழுவிய எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அவர்களில், சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் ஆடைத் துறையில் பணிபுரியும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர், '' என்று சுதந்திர வர்த்தக வலயத்தில் பெண்களுக்காக பணிபுரியும் RED என்ற ( [Revolutionary Existence for Human Development] மனித வளர்ச்சிக்கான புரட்சிகர அமைப்பு தெரிவித்துள்ளது.

சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அந்தக் குழுவின் தலைவர் சந்திரா தேவநாராயண கடிதம் எழுதியுள்ளார்.

வார நாட்களில் வர்த்தக வலயத் தொழிலாளர்கள் தங்கள் பணி நிலைமைகளுக்கு ஏற்ப காலை முதல் இரவு வரை பணிபுரிவதால் வரிசையில் காத்திருக்கவோ, துண்டு டிக்கெட் பெறவோ நேரமில்லை என்று RED அமைப்பு கூறுகிறது.

எரிவாயு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுதந்திர வர்த்தக மண்டலங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எரிவாயு விநியோக முறையை ஞாயிற்றுக்கிழமைகளில் உருவாக்குங்கள். மேலும், தற்போது 20 காஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக டீலர்களுக்கு கூடுதல் காஸ் சிலிண்டர்களை வழங்க வேண்டும்” என சந்திர தேவநாராயணா நிதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

RED அமைப்பின் கூற்றுப்படி, மிகக் குறைந்த ஊதியத்தில் சிறிய தங்குமிடங்களில் வசிக்கும் இந்த வர்த்தக வலய தொழிலாளர்கள், இப்போது தங்கள் பெரும்பாலான நேரத்தை உண்ணாவிரதத்தில் செலவிடுகிறார்கள்.

எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் நெருக்கடி காரணமாக உணவு மற்றும் பானங்கள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு பாக்கெட் சாப்பாடு கூட கிடைப்பது கடினம். எப்போதாவது சிரமப்பட்டுக் கிடைக்கும் இத்தகைய உணவுப் பொட்டலத்தின் விலை 250 ரூபாய்க்கு மேல். வர்த்தக வலயத் தொழிலாளர்கள் இவ்வாறான பணத்தை அன்றாடம் எடுத்துச் செல்வது சிரமமாக உள்ளதாக நிதி அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி