செய்ய முடியாதவற்றை செய்ததன் காரணமாவே முழு நாடும் கஷ்டத்தில் வீழ்ந்துள்ளது எனவும் உணவு நெருக்கடிக்கு துறைக்கு சம்பந்தமான அமைச்சர்களும், கொள்கை அளவில் தீர்மானங்களை எடுத்த நபர்களும் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha)தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலை அதிகரிப்புக்கு வர்த்தக அமைச்சர், கமத்தொழில் அமைச்சர், உணவு அமைச்சர் ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என தெரிவித்துள்ள பிரேமஜயந்த, கமத்தொழில் அமைச்சர் முற்றாக தோல்வியடைந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் டொலர் கையிருப்பில் இல்லை என்றால், டொலரை இல்லாமல் ஆக்கியவர்கள் அதற்கு பொறுப்புக் கூறவேண்டும்.

பசளை கிடைக்காமல் செய்தால், பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்பது கூறி தெரியவேண்டிய விடயமல்ல.

நான் அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கும் இடத்தில் நானில்லை. என்னை நாற்காலி ஒன்றில் அமரவைத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டிய கூடிய காலம் கடந்து சென்று விட்டது. தற்போது வேறு ஒரு அணியால் மாத்திரமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முடியும் எனவும் சுசில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் கூட்டணி:பேச்சுக்கள் ஆரம்பம் என்கிறார் அமைச்சர் மகிந்த அமரவீர

புதிய அரசியல் கூட்டணி:பேச்சுக்கள் ஆரம்பம் என்கிறார் அமைச்சர் மகிந்த அமரவீர

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி