ஜப்பான் பாடகி சயாகா கன்டா (35). இவர் பிரோஸன் படத்தை  ஜப்பானில் மொழி பெயர்த்து பிரபலமானர்.  இவர் ஜப்பானின் பிரபல பாடகர் மாட்சுடா சீகோவின் மகள். கடந்த சனிக்கிழமை அன்று சப்போரோ திரையரங்கில் "மை பேர் லேடி" என்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால், வெகு நேரம் கடந்தும் பாடகி சயாகா வரவில்லை. ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டியிருந்தனர்.

அப்போது , பாடகியின்  நிறுவனத்திலிருந்து ரசிகர்களுக்குத் தகவல் ஒன்றை தெரிவித்தனர். பாடகி சயாகா தங்கியிருந்த ஓட்டலில்  இறந்து கிடப்பதாக கூறினர். இதனால், நிகழ்ச்சி நடைப்பெறவில்லை. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்குள்ள நீச்சல் குளத்தல் பாடகி ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார். 

போலீசார் பாடகியின் உடலை  மீட்டு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சப்போரா ஓட்டலின்  6வது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வேறு எந்த தகவலும் கிடைக்காத நிலையில் போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.   

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி