Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 45 வயதான இந்திய பிரஜை உயிரிழப்பு!

T

The Leader Desk

ஏப்ரல் 6, 2021 • 4:12 PM

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 45 வயதான இந்திய பிரஜை உயிரிழப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திடீர் சுகயீனமுற்ற அவர் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
  • இந்தியாவை சேர்ந்த 45 வயதான திலீப் குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
  • சட்ட வைத்திய பரிசோதனை மற்றும் PCR பரிசோதனைக்காக சடலத்தை குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
  • குறித்த சந்தேகநபர் இரட்டை பிரஜாவுரிமையைக் கொண்டவர் எனவும், சுமார் 15 வருடங்கள் அவர் நாட்டில் தற்காலிகமாக தங்கியிருந்ததாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.
எழுத்து அளவு:

திடீர் சுகயீனமுற்ற அவர் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு அவர் திடீர் சுகயீனமுற்றதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

இதன்போது, சந்தேகநபரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன்போது அவர் உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இந்தியாவை சேர்ந்த 45 வயதான திலீப் குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் தொடர்பிலான நீதவான் விசாரணைகளை வாரியப்பொல மாவட்ட நீதவான் சஞ்ஜீவ ரம்மியகுமார இன்று மதியம் மேற்கொண்டார்.

சட்ட வைத்திய பரிசோதனை மற்றும் PCR பரிசோதனைக்காக சடலத்தை குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இரட்டை பிரஜாவுரிமையைக் கொண்டவர் எனவும், சுமார் 15 வருடங்கள் அவர் நாட்டில் தற்காலிகமாக தங்கியிருந்ததாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில் தோமஸ் என்ற இந்திய பிரஜை கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டவுடன், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அவர் ஒரு மனநோயாளர் என்று அறிவித்தது.

2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 45 வயதான இந்திய பிரஜை உயிரிழப்பு! | Tamil Leader | We Lead the Nation