உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான முதல் கட்ட நடவடிக்கைகள் எடுக்க தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

நேற்று (23) கூடிய தேர்தல் ஆணையம் இது சம்பந்தமாக சகல மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணையம் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.

உள்ளுராட்சி நிறுவனங்களின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. நவம்பர் மாதத்தின் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்துவது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தில் வெளியிடக் கூடிய நிலைமை உள்ளது.

எவ்வகையிலாவது மேற்படி தேர்தலை நடத்தத் தீர்மானித்தால் அதற்குத் தேவையான முதற்கட்ட நடவடிக்கையாக படிவங்கள் தயாரித்தல், அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் கணக்கெடுப்பு, வாக்களிப்பு நிலையங்களை ஆய்வுக்கு உட்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிடுகிறது.

இது குறிந்து ஆராய்ந்து ஆணையத்திற்கு அறிவிக்குமாறு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே டிசம்பர் 31ம் திகதி ஆகும்போது 2021க்கான வாக்காளர் பட்டியல் ஒப்பமிடப்பட்டால் எதிர்வரும் தேர்தலில் அந்த வாக்காளர் பட்டியலை பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இம்முறை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படாதவர்கள் இருப்பின் அது சம்பந்தமான தகவல்களை டிசம்பர் 3ம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணையத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி