இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை வரை வடகிழக்கு மாகாணங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார்.

தற்போதைய நிலைமையின்படி இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடைப்பட்ட பகுதியூடாகவே நிலப்பகுதிக்கு நகர்ந்து புத்தளம் மற்றும் மன்னாருக்கு இடைப்பட்ட பகுதியூடாக அரபிக் கடலுக்கு வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறதாகவும் அவர் கூறினார் .

இதன் காரணமாக எதிர்வரும் 27.11.2021 சனிக்கிழமை வரை தொடர்ச்சியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதோடு தொடர்ச்சியாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளை மீனவர்கள் எதிர்வரும் 27.11.2021 வரை கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி