Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

சிறை கலவரத்தில் 41 பெண் கைதிகள் பலி

T

The Leader Desk

ஜூன் 21, 2023 • 10:33 AM

சிறை கலவரத்தில் 41 பெண் கைதிகள் பலி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மத்திய அமெரிக்கா நாடான ஹொண்டு​ரஸ் தலைநகர் டெகுசிகல்பா அருகில் உள்ள தமரா பகுதியில் பெண்கள் சிறைச்சாலை உள்ளது.
  • நீண்ட போராட்டத்துக்கு பிறகு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
  • சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 41 பெண் கைதிகள் உயிரிழந்தனர்.
  • இதில் 26 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டனர்.
எழுத்து அளவு:


மத்திய அமெரிக்கா நாடான ஹொண்டு​ரஸ் தலைநகர் டெகுசிகல்பா அருகில் உள்ள தமரா பகுதியில் பெண்கள் சிறைச்சாலை உள்ளது.

இங்கு ஏராளமான பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் சிறையில் பெண் கைதிகள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது.

இரண்டு குழுக்களாக பிரிந்து கைதிகள் மோதிக் கொண்டதில் கலவரம் வெடித்தது.

சிறைக்குள் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர்.

மேலும் பலர் மீது தீ வைத்து எரித்தனர்.

கலவரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் கைதிகள் ஆவேசத்துடன் மோதிக் கொண்டதால் உடனடியாக கட்டுக்குள் வரவில்லை.

நீண்ட போராட்டத்துக்கு பிறகு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 41 பெண் கைதிகள் உயிரிழந்தனர்.

இதில் 26 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டனர்.

மற்றைவர்கள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டனர்.

ஏராளமான கைதிகள் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கலவரம் பற்றி அறிந்ததும் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை முன்பு குவிந்து வருகின்றனா்.

இது தொடர்பாக ஹொண்டு​ரஸ் அதிபர் சியோமாரா காஸ்ட்ரோ கூறுகையில், சிறையில் உள்ள மாரா கும்பல், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிந்தே இந்த கலவரத்தை திட்டமிட்டு அரங்கேற்றி உள்ளனர். இது தொடா்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சிறை கலவரத்தில் 41 பெண் கைதிகள் பலி | Tamil Leader | We Lead the Nation