Tamil Leader News
முக்கியம்
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●
செய்திகள்

இலங்கைப் பெண்கள் 41பேர் சௌதி சிறையில்!

T

The Leader Desk

ஏப்ரல் 16, 2021 • 12:42 PM

இலங்கைப் பெண்கள் 41பேர் சௌதி சிறையில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ‘கபீல் முறை” காரணமாக தடுத்து வைக்கபட்டுள்ள பெண்கள், இலங்கை அதிகாரிகளின் தலையீட்டுடன் இலங்கைக்கு வரவழைத்துக் கொள்ளும் வரை நிர்க்கதி நிலையில் உள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு மேலும் சுட்டிக்காட்டுகிறது.
  • மாதங்களிலிருந்து 18 மாதங்கள் வரையிலான காலம் வரை ரியாத் நாடு கடத்துவதற்கான தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்களில் மூவர் சிறு குழந்தைகளுடன் தடுத்து வைக்கபட்டிருப்பதோடு, அவர்களில் ஒரு பெண்ணுக்கு அவசர சிகிச்சையும் தேவைப்படுகிறது.
  • சௌதி அரேபியாவில் பணியாற்றும் வீட்டுப் பணிப் பெண்கள் எதிர்கொள்ளும் அனுசரனையாளர் முறை காரணமாக இவர்கள் படும் கஷ்டம் இதிலிருந்து தெரிகிறது.
எழுத்து அளவு:

‘கபீல் முறை” காரணமாக தடுத்து வைக்கபட்டுள்ள பெண்கள், இலங்கை அதிகாரிகளின் தலையீட்டுடன் இலங்கைக்கு வரவழைத்துக் கொள்ளும் வரை நிர்க்கதி நிலையில் உள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு மேலும் சுட்டிக்காட்டுகிறது.

8 மாதங்களிலிருந்து 18 மாதங்கள் வரையிலான காலம் வரை ரியாத் நாடு கடத்துவதற்கான தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்களில் மூவர் சிறு குழந்தைகளுடன் தடுத்து வைக்கபட்டிருப்பதோடு, அவர்களில் ஒரு பெண்ணுக்கு அவசர சிகிச்சையும் தேவைப்படுகிறது. சௌதி அரேபியாவில் பணியாற்றும் வீட்டுப் பணிப் பெண்கள் எதிர்கொள்ளும் அனுசரனையாளர் முறை காரணமாக இவர்கள் படும் கஷ்டம் இதிலிருந்து தெரிகிறது.

வெளிநாடுகளில் பணியாற்றும் வீட்டுப் பணிப் பெண்கள் தொழில் சட்டங்களின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதுடன், இத்தகைய நிலையில் இலங்கை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்துக் கூறிய மனித உரிமைகள் அமைப்பு தடுத்து வைக்கப்பட்டு கஷ்டப்படும் பெண்களுக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுகளும் அறவிக்கப்படவில்லையெனவும், வழக்குரைஞர்களின் உதவியோ, தூதுவராலயத்தின் உதவிகளைப் பெறுவதற்கான வசதிகளோ இல்லையென மேலும் கூறுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...