டீசல் இல்லாத காரணத்தினாலேயே ரயில்கள் இயக்கப்படாமல் இருப்பதுடன் மாகாணங்களுக்கு இடையில் தொடர்ந்தும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

டீசல் கையிருப்பில் இல்லை என்பதை மக்களுக்கு மறைப்பதற்காக ரயில்கள் இயக்கப்படுவதும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டை திறந்து, போக்குவரத்து வசதிகளை மட்டுப்படுத்தி, அரச மற்றும் தனியார் ஊழியர்களை பணிக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக அவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தனது இயலாமையை மறைப்பதற்காக அரசாங்கம் தூர நோக்கமின்றி எடுக்கும் தீர்மானங்கள் காரணமாக 69 இலட்சம் மக்கள் உட்பட முழு நாட்டு மக்களும் அநாதரவான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்